"இன்னும் 2 'மேட்ச்' தான் மீதி இருக்கு... எந்த 'டீம்'க்கு பிளே ஆஃப் போக 'சான்ஸ்' அதிகம்??,,.. தயாரான புது 'table'... அனல் பறக்கும் கட்டத்தில் 'ஐபிஎல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மும்பை அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் வெளியேறியுள்ள நிலையில், பெங்களூர், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய அணிகளில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால் கொல்கத்தா அணி பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டாலும் மீதமுள்ள 2 லீக் போட்டிகளின் முடிவைப் பொறுத்துத் தான் கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகும்.
இன்று நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெறும். அப்படி ஒரு அணி தோல்வியடையும் பட்சத்தில் அவர்கள் மிகக் குறைந்த வித்தியாசத்தில் தங்களது தோல்வியை பதிவு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து தோல்வியடைந்தால், டெல்லி அணி 15 பந்துகள் மீதம் வைத்து வெற்றி இலக்கை அடைய வேண்டும். பெங்களூர் அணி முதலில் பந்து வீசி தோல்வியடைந்தால், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும்.
மற்றொரு அணியான டெல்லி முதலில் பேட்டிங் செய்து தோல்வியடைந்தால், பெங்களூர் அணி 12 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற வேண்டும். டெல்லி அணி முதலில் பந்து வீசி தோல்வியடைந்தால், பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
மேற்கூறிய படி இன்றைய போட்டியில் நிகழ்ந்தால், இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மாறாக நடந்தால், தோல்வியடையும் அணிக்கு பதிலாக கொல்கத்தா அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அப்படி பெங்களூர், டெல்லி அணிகள் அடுத்த சுற்றுக்கு இன்று முன்னேறினால் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் நாளை மோதும் போட்டிக்காக கொல்கத்தா அணி காத்திருக்க வேண்டும்.
இதில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணி நடையைக் கட்ட வேண்டியது தான். அதே வேளை, மும்பை அணி வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் உள்ள ஹைதராபாத் அணி வெளியேறி கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும். இதனால், இன்றைய போட்டி கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எவ்ளோ சொல்லியும் கேக்காம Risk எடுக்கும் ரோஹித்'... 'எல்லாம் இதுக்காக தானா?!!'... 'விரைவில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு?!!'...
- ‘கொஞ்ச நேரம் தான்’... ‘ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி விடுவார்’... 'பயிற்சியாளர் சொன்ன சுவாரஸ்யம்'!
- 'ராஜஸ்தான்' டீம வீட்டுக்கு அனுப்பியாச்சு,,.. இனிமே எந்த டீமுக்கு எல்லாம் 'பிளே' ஆஃப் 'சான்ஸ்' இருக்கு??... 'த்ரில்லிங்' கட்டத்தை எட்டிய 'ஐபிஎல்'!!!
- Video : "யோவ், 'சூப்பர்' மேனா நீ??..." ஒட்டுமொத்த மேட்சையே திருப்பி போட்ட... அந்த வேற லெவல் 'கேட்ச்'... வைரலாகும் 'வீடியோ'!!!
- #DefinitelyNot... இந்திய அளவில் 'டிரெண்ட்' ஆன வார்த்தைக்கு பின் இருந்த 'கேள்வி',,. "நான் கேட்க காரணமே இது தான்..." 'விளக்கம்' சொன்ன 'வர்ணனையாளர்'!!!
- "இதுவரை எந்த 'சிஎஸ்கே' வீரரும் செய்யாத 'சாதனை'..." அசத்திக் காட்டிய 'இளம்' வீரர்,.. "நீங்க வேற 'லெவல்' போங்க"!!!
- ‘துணிந்து அத நாங்க பண்ணல’... ‘முதல்ல பேட்டிங் பண்றவங்க கண்டிப்பா இதப் பண்ணனும்’... ‘ஒப்புக்கொண்ட கேப்டன்’!
- "இதுக்காச்சும் 'out' குடுப்பீங்களா??..." third 'umpire'-ஐ வம்புக்கு இழுத்த 'ராகுல்'... 'சர்ச்சை'யை கிளப்பிய 'செயல்'!!!
- ‘டாப் பட்டியலில் இருந்தாலும்’... ‘மோசமான பீலிங்ஸ்’... ‘தோல்விக்கு அதுதான் காரணம்’... ‘ஆதங்கத்தை கொட்டிய சீனியர் வீரர்!’
- Video : "'பேட்டிங்'ல மட்டுமில்ல... 'ஃபீல்டிங்'லயும் நம்ம கில்லி தான்..." 'Amazing' கேட்ச் மூலம் வைரலாகும் 'இளம்' வீரர்!!!