‘2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று’!.. இங்கிலாந்து தொடருக்கு எழுந்த சிக்கல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு நியூஸிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியது. இதனை அடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் அவர்களுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால், உடனே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்பு 10 நாள்கள் கழித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஒரு வீரருக்கு மட்டும் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தற்போது அனைத்து வீரர்களும் 10 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் பயிற்சி ஆட்டத்துக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'மு.க.ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கு'?.. கொரோனா நிவாரண நிதி வழங்கிய பிறகு... நடிகர் வடிவேலு சொன்ன 'அந்த' வார்த்தை!.. செம்ம வைரல்!
- இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு ‘மீண்டும்’ நோய் தொற்று.. மருத்துவ அலுவலர் வெளியிட்ட முக்கிய தகவல்..!
- 'தடுப்பூசி இன்னும் போடலியா'?.... 'ரொம்ப Sorry'... 'பிஜி நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பு'... ஆடிப்போன ஊழியர்கள்!
- ‘மாற்றப்பட்ட தேதி’!.. இந்தியா-இலங்கை கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும்..? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
- ‘அதுக்குள்ள என்ன அவசரம்’.. இப்படியே போச்சுன்னா கொரோனா ‘3-வது அலை’ கன்ஃபார்ம்.. இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை..!
- 'டெல்டா வைரஸ் பத்தி கவலைப்படாதீங்க'... 'இந்த தடுப்பூசி அடிச்சு தும்சம் பண்ணிடும்'... ரஷ்யா அதிரடி!
- ‘பூஜ்ஜியம்’!.. நீண்ட நாள்களுக்கு பின் சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’!
- 'கைய மீறி போயிடுச்சு!.. 'அந்த' முடிவ தவிர வேற வழியில்ல!'.. இந்தியா - இலங்கை தொடர்... முக்கிய அறிவிப்பு வெளியீடு!
- ‘எல்லாரையும் தனிமைப்படுத்துங்க’.. 3 பேருக்கு கொரோனா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு..!
- 'டிராவிட்டை இந்திய அணியின் கோச்சாக நியமிக்க கூடாது!'.. முன்னாள் வீரர் வாசீம் ஜாஃபர் கடும் எதிர்ப்பு!.. 'ஓ... இது தான் காரணமா'!