'தோற்றாலும்,ஜெயித்தாலும் மீசைய முறுக்கு'...'நீங்களும் கேப்டன் கூல் தான்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பையை  இழந்து தோல்வி அடைந்த நிலையிலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சிரித்த முகத்துடன் காட்சி அளித்தது பலரையும் வியப்படைய செய்தது. அவரை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.

இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதுவரை உலககோப்பை இறுதி போட்டியில் இல்லாத அளவிற்கு பரபரப்பு தொற்றி கொண்டது.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட நிலையில், அந்த ஓவரும் டை ஆனதால் அதிக பவுண்டரி அடித்த அணி என்ற கணக்கின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது நியூசிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியை அளித்தது. உலகக்கோப்பையை நியூசிலாந்து அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் முடிவு மாற நியூசிலாந்து வீரர்கள் நிலைகுலைந்து போனார்கள்.

இதனிடையே அந்த சோகமான நிலையிலும் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் சோகத்தை மறைத்து சிரித்த முகத்துடன் காட்சி அளித்தது பலரையும் ஆச்சரியப்படவைத்தது. அவரை இந்திய ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே நடப்பு உலகக் கோப்பைத் தொடரில், 10 போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன் 2 சதம் மற்றும் 2 அரைசதம் என 578 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் ஒரே உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த கேப்டன் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்