VIDEO: ‘அம்பயர் கிட்ட வாக்குவாதம்’.. அவுட்டா? நாட் அவுட்டா? அப்படி என்னதான் நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மூன்றாம் அம்பயர் விராட் கோலிக்கு கொடுத்த அவுட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இதில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது அஜாஸ் படேல் வீசிய ஓவரில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து வந்த புஜாராவும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். 4 பந்துகளே சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்காமல், அஜாஸ் படேல் வீசிய ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி அவுட்டானார். இந்த விக்கெட்டுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில் அஜாஸ் படேல் வீசிய 30-வது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்தப் பந்தை அடிக்காமல் தடுக்கவே விராட் கோலி செய்தார். ஆனால் பந்து அவரது காலில் பட்டுச் சென்றது. அதனால் கள அம்பயர் அதற்கு எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தார். உடனே மூன்றாம் அம்பயரிடம் விராட் கோலி ரிவியூ கேட்டார்.

அப்போது பந்து பேட்டிலும், காலிலும் ஒரே நேரத்தில் பட்டதுபோல் இருந்தது. இதனால் நீண்ட நேரமாக 3-வது அம்பயர் ஆலோசனை செய்தார். இதனை அடுத்து இறுதியாக அவுட் என அறிவித்தார்.

ஆனால் பந்து முதலில் பேட்டில் பட்டதுபோல் தெரிந்ததால், விராட் கோலி கள அம்பயர்களிடம் இதுகுறித்து வாக்குவாதம் செய்தார். ஆனால் மூன்றாம் அம்பயர் அறிவித்த முடிவை மாற்ற முடியாது என்பதால், விராட் கோலி அங்கிருந்து கோபமாக வெளியேறினார். அம்பயரின் இந்த முடிவுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

VIRATKOHLI, INDVNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்