"பாவம்யா அந்த மனுஷன், ரொம்ப நொந்து போயிருப்பாரு..." 'இந்திய' வீரருக்காக வருந்திய 'நெட்டிசன்கள்'... 'பரபரப்பு' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்று வரும் மூன்றாவது டி 20 போட்டியில், இந்திய வீரர் ஒருவர் இடம்பெறாமல் போனது, ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்காக, இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது, அதில் ஐபிஎல் தொடரில் ஜொலித்த வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.  இந்நிலையில், முதல் டி 20 போட்டியில், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் இடம்பெறாத நிலையில், இரண்டாவது டி 20 போட்டியில் இருவரும் களமிறங்கினர்.

இதில், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆடிய இஷான் கிஷான், மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் வெளிக்காட்டும் அதே அதிரடி ஆட்டத்தை, எந்தவித பயமில்லாமல் ஆடிக் காட்டினார். அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கையும் அவர் வகித்தார். மற்றொரு வீரரான சூர்யகுமார் யாதவிற்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனையடுத்து, இன்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில், இஷான் கிஷான் இடம்பெற்றுள்ள நிலையில், சூர்யகுமார் ஆட தேர்வாகவில்லை. சூர்யகுமாருக்கு பதிலாக, இரண்டு போட்டிகள் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா களமிறங்கினார்.

முன்னதாக, பல ஆண்டுகள் ஐபிஎல் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த போதும், சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வந்தது. இறுதியில், ஒரு வழியாக இந்த தொடரில் இடம் கிடைத்தும், ஒரு போட்டியுடன் மீண்டும் உட்கார வைக்கப்பட்டுள்ளார். இது பற்றி வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'தற்போதைய முடிவு, நிச்சயம் சூர்யகுமாருக்கு கடினமானதாக இருக்கும். ஆனால், ரோஹித் அணியில் வந்துள்ளது, அவருக்கு இன்னும் நெருக்கடியாகவே அமையும். அடுத்த இரண்டு போட்டிகளில், ஒரு போட்டியிலாவது அவர் ஆடுவார் என நான் நம்புகிறேன்' என தெரிவித்திருந்தார்.

 

அதே போல, நெட்டிசன்கள் பலரும், சூர்யகுமார் யாதவ், அறிமுகமான போட்டிக்கு அடுத்த போட்டியிலேயே அணியில் இடம்பெறாமல் போனதை எண்ணி வருந்தி ட்வீட்களை செய்து வருகின்றனர்.
 










 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்