மனசுல இருந்த பல வருஷ ‘வலி’.. இது போதுமா இப்போ அவர டீம்ல எடுக்க..? ‘வெகுண்டெழுந்த’ ரசிகர்கள்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் போட்டி இன்று (28.10.2020) அபுதாபி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தேவ்தத் பட்டிகல் 74 ரன்கள் அடித்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 166 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இதில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய வீரர்களில் பட்டியல் வெளியானது. அதில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை. இதனால் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் சூர்யகுமாருக்காக குரல் கொடுத்தனர். மேலும் ரசிகர்கள் பலரும் சூர்யகுமாரை அணியில் எடுக்காதது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

முன்னதாக பேட்டி ஒன்றில் தெரிவித்த சூர்யகுமார், ஒவ்வொரு முறை இந்திய அணிக்கான பட்டியல் வெளியாகும் போதும் எனது தந்தை என் பெயர் உள்ளதா என பார்ப்பார். பார்த்துவிட்டு உன் பெயர் அதில் இல்லை என தெரிவிப்பார். அது என்னுடைய தவறு இல்லை என அவருக்கு பதிலளிப்பேன் என உருக்கமாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்றைய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனி ஒருவனாக கடைசி வரை நின்று அணியை வெற்றி பெற வைத்துள்ளார். வெற்றி பெற்ற பின் ‘நான் இங்கே தான் இருக்கிறேன். எங்கேயும் போகவில்லை’ என்பது போல சைகை காட்டினார். இதன்மூலம் பிசிசிஐ தேர்வு குழுவுக்கு சூர்யகுமார் சிறப்பான பதிலடி கொடுத்ததாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்