‘அதிரடி வீரருக்கு வந்த சோதனை’!.. 3 மேட்ச்ல இவரோட மொத்த ஸ்கோரே 1 தான்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் போல்டாகி வெளியேறிய கே.எல்.ராகுலின் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த போட்டி நாளை (18.03.2021) அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 46 பந்துகளில் 77 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஜோஸ் பட்லர் 83 ரன்களும், ஜானி பேர்ஸ்டோ 40 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் (0), இங்கிலாந்து பந்துவீச்சாளர் மார்க் வுட் வீசிய ஓவரில் போல்டாகி வெளியேறினார். முதல் டி20 போட்டியில் 1 ரன்னில் அவுட்டான ராகுல், அடுத்த இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்