ரொம்ப மோசம்... இதுக்கு மேலயும் இவர் 'கேப்டனா' இருக்கணுமா?... அடுக்கடுக்கான கேள்விகளால் 'ஆட்டம்' காணும் பதவி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி திரில் வெற்றி பெற்றது. மேட்ச் கடைசி ஓவர் வரை சென்றதால் ரசிகர்கள் எந்த அணி ஜெயிக்கும் என நகம் கடித்து காத்துக்கொண்டு இருந்தனர். விறுவிறுப்பான இந்த மேட்சில் பெங்களூர் அணி வென்று பாயிண்ட் டேபிளில் 3-வது இடத்தை கைப்பற்றி உள்ளது.

இரண்டு அணிகளும் சரிசமமாக மோதியதால் இந்த வருடத்தின் சிறந்த பரிசு ஐபிஎல் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இஷான் கிஷன், தேவ்தத் படிக்கல் என ஜூனியர் வீரர்களின் ஆட்டம் ரசிகர்களை பரவசமூட்டியது. அதே நேரம் கேப்டன்களும், அனுபவம் மிகுந்த வீரர்களுமான ரோஹித் மற்றும் விராட்டின் ஆட்டம் ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்தது.

குறிப்பாக விராட்டின் மோசமான பார்ம் இந்த போட்டியிலும் தொடர்ந்தது. 11 பந்துகளில் 3 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை அவர் இழந்தார். ஹைதராபாத் அணிக்கு எதிராக 14 ரன்னிலும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1 ரன்னிலும் விக்கெட் இழந்த விராட் இந்த மேட்சில் மீண்டு வருவார் என எதிர்பார்த்திருக்க அவர் மறுபடியும் ஏமாற்றி விட்டார்.

இதனால் பெங்களூர் அணியின் கேப்டனை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பீல்டிங்கிலும் கோலி சமீபகாலமாக சொதப்ப ஆரம்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்