இவரோட கோபத்துக்காக ஒரு ‘வைரத்தை’ தொலைச்சிட்டீங்களே.. ‘வெளியேறிய இளம் வீரர்’.. க்ருணால் பாண்ட்யாவை ‘லெஃப்ட் ரைட்’ வாங்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இளம் வீரர் தீபக் ஹூடா பரோடா அணியில் இருந்து விலகியது கிரிக்கெட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டி20 போட்டியில், பரோடா அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரின்போது பரோடா அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியாவுடன் இளம் வீரர் தீபக் ஹூடாவுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் அப்போது அணியில் இருந்தும், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் தீபக் ஹூடா வெளியேறினார்.

இதனை அடுத்து க்ருணால் பாண்ட்யா தன்னை அவமரியாதை செய்துவிட்டதாக தீபக் ஹூடா குற்றம் சாட்டினார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பரோடா அணிக்காக 46 முதல் தர கிரிக்கெட் போட்டிகள் தீபக் ஹூடா விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இந்த நடைபெற்ற ஐபிஎல் தொடரில், 8 போட்டிகளில் விளையாடி 1 அரைசத்துடன் 116 ரன்களை தீபக் ஹூடா விளாசியுள்ளார்.

இந்த நிலையில் பரோடா அணியில் இருந்து விலகுவதாக தீபக் ஹூடா அறிவித்துள்ளார். தற்போது ராஜஸ்தான் அணியில் அவர் விளையாடுவதற்கு பரோடா அணி அனுமதித்துள்ளது. இது கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் வீர்ர இர்பான் பதானும் பரோடா அணியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில், ‘இந்திய அணிக்கு ஆடும் வாய்ப்புள்ள நிறைய வீரர்களை, இன்னும் எத்தனை கிரிக்கெட் சங்கள் இழக்கும்? தீபக் ஹூடா வெளியேறியது பரோடா அணிக்கு மிகப்பெரிய இழப்பு. அவரால் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கூட விளையாட முடியும். ஒரு பரோடா அணி வீரனாக எனக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது’ என இர்பான் பதான் பரோடா அணியை விமர்சனம் செய்துள்ளார்.

அதேபோல் ரசிகர்கள் பலரும், க்ருணால் பாண்ட்யாவின் கோபத்தால் பரோடா அணி ஒரு வைரத்தை இழந்துள்ளது என தீபக் ஹூடாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில் க்ருணால் பாண்ட்யா மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்