'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளன. மே 30ம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகள், ஜூலை 14ம் தேதி வரை சுமார் ஒன்றரை மாதம் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்திய அணியில் எந்தந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமே நடைபெற்றது.முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் தங்களது பட்டியலை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெற்ற தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு தேர்வான அணிகளிலிருந்தே வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில் மாற்று விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பன்ட்டுக்கு பதிலாக,தினேஷ் கார்த்திக்கின் பெயர் இடம் பெற்றது.இதற்கு ஆதரவாகவும்,எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.இதற்கு தேர்வு குழுவின் சார்பில் தகுந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் "தினேஷ் கார்த்திக் 91 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர்.ஆனால் ரிஷப் பன்ட்டோ வெறும் 5 போட்டிகள் அனுபவம் கொண்டவர்.எனவே உலகக்கோப்பையில் தோனிக்கு மாற்று வீரராக ரிஷப்பை களமிறக்காமல் போனதற்கு இது தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டதற்காக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு 'அவர் நிச்சயம் உலகக்கோப்பையில் பதிலளிப்பார்' என அவரது ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்