“ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை!”.. இந்திய வீரர் என்பதை ட்விட்டர் பயோகிராபியில் இருந்து நீக்கினாரா ரோஹித்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐ.பி.எல் தொடர் முடிந்ததும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது  இந்திய கிரிக்கெட் அணி. அந்த ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது ஒருநாள், டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று வகை போட்டிகளிலும் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர்.

இந்நிலையில் பிசிசிஐ இதில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டபோது,   மும்பை அணியின் கேப்டனும் இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.  இதனிடையே ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் ரசிகர்கள் பலவிதமான கேள்விக்கும் குழப்பத்துக்கும் ஆளாகினர்.

அதே சமயம், தமது ட்விட்டர் பக்கத்தின் சுய குறிப்பில் ‘இந்திய கிரிக்கெட்டர்’ என்கிற வாசகத்தை ரோஹித் நீக்கியுள்ளார் என்று தகவல் பரவின. இதனையடுத்து, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம் கிடைக்காததால் ரோஹித் சர்மா, அந்த வாசகத்தை நீக்கியுள்ளார் என்றும் வதந்திகள் பரவின. ஆனால், உண்மையில் இணையத்தில் பரவும் குறிப்பிட்ட அந்த ஸ்கிரின் ஸாட் ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்டதும் என்பதும், அதில் ரோஹித் சர்மாவின் ஃபாலோயர்ஸ் 17 மில்லியன் என்று இருப்பதும், தற்போது அவருடைய ஃபாலோயர்ஸ் 17.6 மில்லியன் என்பதும்தான் நிதர்சனம்.

அத்துடன் சர்மா காயம் காரணமாக, ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசிப் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டிய உண்மை. இதன் காரணமாகவே இந்திய அணியில் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறாமலிருக்க வேண்டும் என்றும் கருத்துகள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரோஹித் சர்மாவின் உடல்நிலை குறித்து கண்காணித்துவருவதாக பி.சி.சி.ஐ விளக்கம் அளித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்