சர்வதேச போட்டியில்.. ட்ரெண்ட் போல்ட் எடுத்த முடிவு.. கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வருபவர் ட்ரெண்ட் போல்ட்.

Advertising
>
Advertising

Also Read | "கோவில்'ல திருடிட்டு போறதுக்கு முன்னாடி.." திருடன் செஞ்ச ஒரே ஒரு சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ

சர்வதேச போட்டிகளில் மட்டுமில்லாமல், ஐபிஎல் உள்ளிட்ட மற்ற டி20 லீக்களிலும் ட்ரெண்ட் போல்ட்டின் பங்கு, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அப்படி ஒரு சூழ்நிலையில். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான போல்ட், சர்வதேச கிரிக்கெட் தொடர்பாக எடுத்துள்ள முடிவு ஒன்று, கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து தனது பெயரையும் நீக்க வேண்டும் என ஒரு கோரிக்கை ஒன்றை போல்ட் வைத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் நிர்வாகம், அவரது பெயரை வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது.

இது தொடர்பாக பேசும் ட்ரெண்ட் போல்ட், "இது மிகவும் ஒரு கடினமான முடிவு தான். நான் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எனது அணிக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான் சிறுவயது கனவாக இருந்தது. அப்படி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் நான் ஆதி பல்வேறு சாதனைகளை புரிந்தது, மிகுந்த பெருமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன். இது என்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்காக நான் எடுத்த முடிவாகும். எந்த ஒரு விஷயத்திலும் குடும்பம் தான் எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்துள்ளது. எனவே எனது குடும்பத்தை முன்னிறுத்தி கிரிக்கெட்டுக்கு பிறகான வாழ்க்கைக்கு எங்களை தயார்படுத்திக் கொள்ள நான் முற்படுகிறேன்" என தெரிவித்துள்ளார்.

ட்ரெண்ட் போல்ட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றாலும், அவர் ஒரு சில தொடர்களை மட்டுமே தொடர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து விலகிக் கொண்டால், அணியில் ஆடும் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக தான் இருக்கும். இதை தான், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் இருந்து அவர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதை குறிக்கின்றது.

இதன் மூலம், தனக்கு இனிவரும் தொடர்களில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காது என்பதை தெரிந்து தான், போல்ட்டும் இந்த முடிவினை எடுத்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமும் போல்ட் முடிவை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளது. உலக கிரிக்கெட்டில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ட்ரெண்ட் போல்ட்டின் முடிவு பற்றி, கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read | "30 வருசமா இத யாரும் கவனிக்கலயா?".. பாட்டியின் கல்லறையில் இருந்த வார்த்தை.. முதல் தடவ பாத்ததும் தலை சுற்றி போன 'பேத்தி'

CRICKET, TRENT BOULT, ட்ரெண்ட் போல்ட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்