"'ஃபீல்டிங்' பண்ண சொன்னா, 'spider man' மாதிரி பறக்குறாரே.." 'பவுண்டரி' லைனுக்கு அருகே 'போல்ட்' செய்த 'மேஜிக்'... அசர வைத்த 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில், நியூசிலாந்து அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரையும் 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 154 ரன்களில் ஆல் அவுட்டாகியது.

இதனிடையே, இந்த போட்டியில், நியூசிலாந்து அணி வீரர் டிரென்ட் போல்ட் (Trent Boult) பிடித்த கேட்ச் ஒன்று, தற்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது. பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ் (Liton Das), நியூசிலாந்து வீரர் ஹென்ரியின் பந்து வீச்சை எதிர்கொண்ட போது, அது பேட்டில் பட்டு, 'third man' திசையை நோக்கி உயரமாக சென்றது. அப்போது அங்கே, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த போல்ட், மிகவும் அற்புதமாக பறந்து சென்று, ஒற்றைக்கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.

 

யாரும் நம்ப முடியாத வகையிலான கேட்ச் ஒன்றை, போல்ட் பிடித்தது மட்டுமில்லாமல், அந்த பந்தை மிகவும் லாவகமாகவும் ஒற்றைக் கையில் தக்க வைத்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி, பார்க்கும் ரசிகர்களை மலைக்க வைத்துள்ளது.

மிகவும் சிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான டிரென்ட் போல்ட், ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடிய போது, பவுண்டரி லைனுக்கு அருகே இதே போல ஒற்றைக் கையில் கேட்ச் ஒன்றை பிடித்து அனைவரையும் அசர வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்