CSK vs RCB: 8 வருடத்துக்குப் பிறகு மிஸ் ஆகும் விஷயம்… ரசிகர்கள் சோகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertising
>
Advertising

அவங்க இல்லைன்னா என்ன நாங்க இருக்கோம்.. டிவிட்டர் சம்பவத்துக்கு பிறகு எலான் மஸ்க்-க்கு அழைப்பு விடுத்த இந்திய நிறுவனம்.. சம்பவம் இருக்கு போலயே..!

முதல் வெற்றிக்காக போராடும் CSK…

ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்த மூன்று முதல் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறாமல் புள்ளிப்பட்டியலின் இறுதியில் உள்ளன. இந்நிலையில் இன்று நடக்கும் தங்கள் நான்காவது போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடுகிறது.

ஜடேஜா தலைமையில் CSK….

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து இந்த ஆண்டு தோனி விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் நடப்பு ஐபிஎல் தொடர் சென்னை அணிக்கு மோசமான தொடக்கத்தை கொடுத்துள்ளது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி பெறுவது இதுவே முதல்முறை. இதனால் ஜடேஜா மீது விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளன.

வெற்றிநடை போடும் RCB…

ஐபிஎல் தொடரின் ஆதிக்கம் மிக்க அணிகளில் RCB யும் ஒன்று.  பெங்களூர் அணியஒ 2014 ஆம் ஆண்டு முதல் கோலி கேப்டனாக தலைமையேற்று வழிநடத்தினார். அவர்  தலைமையில் சிறப்பாக செயல்பட்டாலும் RCB அணியால் கோப்பையை வெல்ல முடியவில்ல. இதனால் அவர் கடந்த ஆண்டோடு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் கடைசி வரை RCB அணிக்காகதான் விளையாடுவேன் என அறிவித்திருந்தார். இதையடுத்து ஆர் சி பி அவரை 15 கோடிக்கு தக்கவைத்தது. இப்போது அந்த அணிக்கு முன்னாள் சி எஸ் கே வீரர் டு பிளஸ்சி தலைமையேற்றுள்ளார். இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றை வென்று புள்ளிப்பட்டியலில் முன்னணியில் உள்ளது.

கோலி, தோனி இல்லாத TOSS….

இதையடுத்து இன்று சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த போட்டி பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இரு அணிகளும் மோதிய பல போட்டிகள் பரபரப்பான போட்டிகளாக அமைந்தன. அந்த போட்டிகளில் எல்லாம் இரு அணிகள் சார்பாக டாஸ் போட கோலி மற்றும் தோனி ஆகிய இருவருமே வருவார்கள். ஆனால் இன்று நடக்கும் போட்டியில் அவர்கள் இருவரும் அணியில் இருந்தாலும், டாஸ் போட அவர்கள் வரமாட்டார்கள். 2014 ஆம் ஆண்டு கோலி கேப்டன் ஏற்றதற்குப் பின்னர் முதல்முறையாக அவர்கள் இருவரும் இல்லாமல் டாஸ் நடக்க போகிறது.

தொடர் கொள்ளை.. ஆனா எல்லாத்துலயும் ஒரே பார்முலா.. போலீஸ் போட்ட வலையில் சிக்கிய பலே திருடன்..!

CRICKET, IPL, IPL 2022, CSK, RCB, CSK VS RCB, MS DHONI, VIRAT KOHLI, TOSS WITHOUT DHONI AND KOHLI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்