டி20 உலகக்கோப்பையை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்பு..? சிஎஸ்கேவுக்கு நடந்த அந்த ‘மேஜிக்’ இன்னைக்கு நடக்குமா..? எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் இறுதிப்போட்டி இன்று (14.11.2021) இரவு 7:30 மணியளவில் துபாயில் நடைபெற உள்ளது. இதில் நியூஸிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன. ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று சம பலத்துடன் உள்ளன.

அதேபோல் இரு அணிகளும் இதுவரை டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியதில்லை. அதனால் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உள்ளது என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இறுதிப்போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சற்று பெரியது. அதனால் இங்கு டாஸ் என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 17 டி20 போட்டிகள் துபாய் மைதானத்தில் நடைபெற்றுள்ளது. அதில் 16 முறை இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிதான் வெற்றி பெற்றுள்ளது. இதில் விதிவிலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே முதலாவதாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில்தான் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 192 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

அதனால் டாஸ் வெற்றி, தோல்வி தங்களை பெரிதும் பாதிக்காது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். மேலும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி பயன்படுத்திய யுக்தியை, இன்றைய டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தாங்களும் பயன்படுத்த உள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

NZVAUS, T20WORLDCUPFINAL, TOSS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்