"கேப்டன் 'பதவி'ல இருந்து தூக்குனதும் 'வார்னர்' 'reaction' இதான்.. பயிற்சியாளர் உடைத்த 'சீக்ரெட்'!!.. பாவம்யா 'மனுஷன்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி, இந்த சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

சிறந்த ஐபிஎல் அணிகளில் ஒன்றான ஹைதராபாத் அணி, இந்த சீசனில் மிகவும் மோசமாக ஆடி வருகிறது. அதிலும், குறிப்பாக அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை, அனைத்து போட்டிகளிலும் சொதப்பி வருகிறது. இதன் காரணமாக, இன்றைய போட்டிக்கு முன்பாக, அந்த அணியின் கேப்டனாக இருந்த வார்னரை நீக்கி, அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக ஹைதராபாத் அணி நிர்வாகம் நியமித்தது.

இதன் காரணமாக, வார்னரின் ரசிகர்கள், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். பல சீசனாக, ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்திய வீரரை, ஒரு சீசனின் பாதிலேயே இப்படியா மாற்றுவது என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி, கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதும், வார்னர் அதனை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது பற்றி கூறியுள்ளார்.


'வார்னர் சிறந்த வீரர் தான். இந்த முடிவைக் கேட்டதும், வார்னர் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார். கண்டிப்பாக எந்த ஒரு வீரராக இருந்தாலும், இந்த அதிருப்தி இருக்கத் தான் செய்யும். ஆனால், ஒரு அணியாக அணியின் தேவை என்ன என்பதை வார்னர் உணர்ந்து கொண்டார்.

எங்களது அணியைப் பொறுத்தவரையில்,  2 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல் ரவுண்டர் மற்றும் ரஷீத் கான் என்பது தான் எங்களது அணியின் வெளிநாட்டு வீரர்களின் காம்பினேஷன். பேட்ஸ்மேன்களை பொறுத்தமட்டில், வில்லியம்சன் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் சிறந்த ஃபார்மில் உள்ளனர். இதனால், எதிர்பாராதவிதமாக வார்னரை நீக்க வேண்டியதாயிற்று' என டாம் மூடி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்