28 பந்துல 80 ரன்.. வளைக்க 'போட்டிபோடும்' பிரபல அணிகள்.. ஆனா அவருக்கு 'அந்த டீம்' மேலதான் கண்ணாம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் அனைவரின் கவனத்தையும் இங்கிலாந்து இளம்புயல் டாம் பேண்டன் ஈர்க்க போவது உறுதியாகி உள்ளது. அபுதாபியில் நடைபெற்ற டி10 போட்டியில் டாம் பேண்டன் 28 பந்துகளில் 80 ரன்களை குவித்து கிரிக்கெட் உலகில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.
2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் டாம் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது. ஐபிஎல் அணிகளில் மிகவும் வலிமையான அணிகளான சென்னை, மும்பை இரண்டு அணிகளும் டாமை ஏலத்தில் எடுக்க ஸ்கெட்ச் போட்டு வருகின்றனர். இந்தநிலையில் ஐபிஎல் அணிகளில் எந்த டீமுக்காக ஆட ஆசை என கேட்கப்பட்டது.
பதிலுக்கு அவர் நான் மும்பை இந்தியன் அணியின் ரசிகன், அதனால் அந்த அணிக்காக ஆட ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து நாட்டின் அண்டர் 19 அணிக்காக மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆடியதாகவும் அப்போது 5-0 கணக்கில் போட்டியில் தோல்வி அடைந்தாலும் உள்ளூர் மக்கள் கொடுத்த ஆதரவை தன்னால் மறக்க முடியாது என்றும் டாம் தெரிவித்து இருக்கிறார்.
சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சாம் பில்லிங்ஸ் பதிலாக சென்னை அணி டாமை ஏலத்தில் எடுக்க ஆசைப்படுகிறது. அதே நேரம் ஈவின் லீவிஸை விடுவித்ததால் மும்பை அணியும் டாமை குறிவைத்துள்ளது. இதனால் 2 அணிகளில் டாமை ஏலத்தில் எடுக்க போவது எந்த அணி? என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!
- Video: எப்டி சிக்ஸ் போச்சு?.. 'தலையில்' கைவைத்த கோலி.. கையை 'விரித்த' புஜாரா.. 'உறைந்து' போன ஷமி!
- 'டிரெஸ்ஸிங்' ரூமில் நடந்த 'எல்லை' மீறல்..மேட்ச் பிக்ஸிங்கா ?.. 'விசாரணைக்கு' உத்தரவிட்ட பிசிசிஐ!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- இந்தியாவுல 'மொத ஆளு' நீங்கதான்.. 'தளபதி' கோலிக்கு 'விசில்' போட்ட சிஎஸ்கே!
- 'டெஸ்ட்' தொடரின் பாதியிலேயே.. 'அடுத்த' தோனியை 'வீட்டுக்கு' அனுப்பிய பிசிசிஐ.. என்ன ஆச்சு?
- 'கூல்ட்ரிங்க்ஸ்' ஒழுங்கா கொடுக்கல போல.. ரசிகர்கள் கிண்டல்.. 'பதிலளித்த' சஞ்சு சாம்சன்!
- உங்க 'ரொமான்ஸை' கொஞ்சம் நிறுத்துறீங்களா?.. ரெண்டு 'டீமும்' செஞ்ச வேலையை பாருங்க!
- 2020 'ஐபில்'ல.. மொத்தம் '9 டீம்' விளையாட போகுதாம்.. என்ன காரணம்?
- 'அடுத்த' தோனிக்கெல்லாம் 'வாய்ப்பு' குடுக்குறீங்க.. 'அவர' மட்டும் ஏன் ஓரம் கட்டுறீங்க?