“பவுண்டரி அடிங்க, ஆனா இத மட்டும் பண்ணாதீங்க”.. கடைசி ஓவரில் தோனியிடம் விளையாட்டா பிராவோ வச்ச கோரிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியிடம் குறும்பாக வைத்த கோரிக்கை குறித்து பிராவோ பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ‘ஓ இதுதான் காரணமா..?’ பேட்டை கடித்த தோனி.. முன்னாள் வீரர் கொடுத்த விளக்கம்..!

ஐபிஎல் தொடரின் நேற்றைய 54-வது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (41 ரன்கள்), டெவோன் கான்வே (87 ரன்கள்) ஆகிய இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து களமிறங்கிய ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். தோனி 21 (8 பந்துகள்), பிராவோ 1 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். அதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்களை குவித்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதில் சென்னை அணியை பொறுத்தவரை மொயின் அலி 3 விக்கெட்டுகளும், பிராவோ, முகேஷ் சௌத்ரி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், தீக்‌ஷனா 1விக்கெட்டும் எடுத்தனர்.

முன்னதாக டெல்லி அணி வேகப்பந்து வீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி (9 ரன்கள்), உத்தப்பா (டக் அவுட்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனை அடுத்து களமிறங்கிய பிராவோ, ஹாட்ரிக் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். அவர் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிங்கிள் தட்டிவிட்டு தோனிக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.

இதனை அடுத்து தோனி கடைசி 2 பந்தில் தலா 2 டபுள்ஸ் ஓடினார். இதனால் மறுமுனையில் ஓடிய பிராவோ களைத்துப் போயிருந்தார். அவர் இரண்டு முறையும் பாய்ந்து தான் க்ரீசை தொட்டார். இதுகுறித்து போட்டி முடிந்தபின் பேசிய பிராவோ, ‘நான் இறங்கியதும் முதலில் ஹாட்ரிக் விக்கெட் விழாமல் பார்த்த்துக் கொண்டேன். பின்னர் தோனிக்கு ஸ்டிரைக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் அவரிடம் டபுள்ஸ் ஓடாமல் பவுண்டரி அடிக்குமாறு ஜாலியாக கூறினேன். ஆனால் ஒரு சிறந்த வீரருடன் பேட்டிங் செய்தது நல்ல அனுபவமாக இருந்தது. ருதுராஜ், கான்வே தொடங்கி எங்கள் அணியினர் அருமையாக விளையாடினர்’ என பிராவோ கூறினார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, IPL 2022, CSK, DELHI CAPITALS, CSK VS DC, DWAYNE BRAVO, MS DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்