"நீ சச்சின் மகன்-ங்குறத மறந்துடு".. அர்ஜுன் டெண்டுல்கரின் கோச் போட்ட அதிரடி கண்டிஷன்.. ஆத்தாடி அவரா இது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபுகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தையான யோகராஜ் சிங், சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுனுக்கு ரஞ்சி கோப்பை அறிமுகத்திற்கு முன்னதாக பயிற்சி அளித்திருந்தார். அப்போது கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் பல கண்டிஷன்களையும் தான் விதித்திருந்ததாக தெரிவித்திருக்கிறார் யோகராஜ் சிங்.
கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் கொடி கட்டிப் பறந்து, பல ஜாம்பவான்களையும் மிரள வைத்தவர் ஆவார். சச்சின் படைத்துள்ள சாதனைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்ற சூழலில், அவரது மகனான அர்ஜுன் டெண்டுல்கரும் கிரிக்கெட் வீரராக தான் இருந்து வருகிறார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர், உள்ளூர் தொடர்களில் ஆடி வருகிறார். அப்படி ஒரு சூழலில், தற்போது ஆரம்பமாகி உள்ள ரஞ்சி டிராபி தொடரில் கோவா அணிக்காக ஆடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். இதில் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக, கோவா அணி மோதி இருந்தது. இதன் மூலம் ரஞ்சி தொடரில் அறிமுகமான அர்ஜுன் தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
இதுகுறித்து பேசியுள்ள யுவராஜின் தந்தையும் பயிற்சியாளருமான யோகராஜ் சிங்,"செப்டம்பர் முதல் வாரத்தில், யுவியிடம் இருந்து (யுவராஜ்) எனக்கு அழைப்பு வந்தது, ‘அப்பா, அர்ஜுன் சண்டிகரில் இரண்டு வாரங்கள் இருப்பார், அவருக்கு பயிற்சி அளிக்க உங்களுக்கு நேரம் இருக்குமா என சச்சின் கேட்டுள்ளார்’ என்று கூறினார். நான் எப்படி சச்சினுக்கு மறுப்பு சொல்வேன் என்று சொன்னேன், அவர் என் மூத்த மகன் போன்றவர். ஆனால் எனக்கு ஒரு நிபந்தனை இருந்தது. நான் யுவியிடம், ‘எனது பயிற்சி முறை உனக்குத் தெரியும். எனது பயிற்சிமுறையில் யாரும் தலையிடுவதை நான் விரும்புவது இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், "அடுத்த 15 நாட்களுக்கு அவர் சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதை மறந்துவிட வேண்டும் என்று அவரிடம் கூறியிருந்தேன். அவன் அப்பாவின் நிழலில் இருந்து வெளியேற வேண்டும் என்று நான் சொன்னேன். அவர் பேட்டிங் செய்வதைப் பார்த்தபோது, இவர் ஒரு அதிரடி ஆட்டக்காரராக இருப்பார் என்று நினைத்தேன். உடனே சச்சினுக்கும் யுவராஜுக்கும் மெசேஜ் செய்தேன். நான் சச்சினை அழைத்து, அர்ஜுனின் பேட்டிங்கில் ஏன் அதிக கவனம் செலுத்தவில்லை என்று கேட்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
சண்டிகரில் அர்ஜுன் தங்கியிருந்த போது, தினமும் 5 மணிக்கு எழுந்து 2 மணிநேரங்கள் ரன்னிங். பின்னர் வெயிட் லிஃப்ட்டிங், பின்னர் கிரிக்கெட் பயிற்சி என கடுமையான டாஸ்க்குகளை வைத்திருந்தாகவும் யோகராஜ் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், யோகராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ஜுன் டெண்டுல்கருடன் தான் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். இவை தற்போது வைரலாகி வருகின்றன.
Also Read | "அந்த மேட்ச்-க்கு பிறகு.. பாகிஸ்தான்ல ஒரு கடைக்கு போனா கூட...".. முகமது ரிஸ்வான் சொன்ன உருக்கமான தகவல்!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அப்பா மாதிரியே புள்ளையும்".. 15 வயசுல சச்சின் செஞ்ச அதே சாதனை.. முதல் போட்டியில் பட்டையை கிளப்பிய அர்ஜுன் டெண்டுல்கர்!!
- அந்த ஊர் சாப்பாடு பத்தி சொல்லவா வேணும்.. இந்தியாவின் பிரபலமான சுற்றுலா தலத்தில் சச்சின்! செம்ம Enjoyment தான்
- "இப்படி ஒரு அனுபவம் கிடைச்சதே இல்லங்க".. மீன்பிடி படகை பார்த்ததும் ஜாலியான சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ..
- வெளில பார்க்க தான் ரயில்.. ஆனா உள்ள.. ரயில்வே நிர்வாகத்தின் தரமான சம்பவம்.. இனி எதுவும் வேஸ்ட் ஆகாது.. வைரல் Pics..!
- "என் குரு எப்போவுமே சச்சின் தாங்க".. உருக்கமாக பேசிய தல தோனி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!
- சச்சின் பகிர்ந்த ஃபோட்டோ.. "இத விட கிரிக்கெட் fans-அ குஷிப்படுத்தும் ஃபோட்டோ காட்டுறவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்"..
- "அவர அப்படி பாத்ததே கிடையாது".. இரண்டு நாளா தூங்காம இருந்த சச்சின்.. "எல்லாத்துக்கும் அந்த ஒரு பவுலர் தான் காரணமாம்"
- "சச்சினுக்கு எல்லாம் தெரியும், ஆனா.." வறுமையில் வினோத் காம்ப்ளி.. மனம் உடைய வைக்கும் பின்னணி!!
- “சஞ்சு சாம்சன் அப்படி சொன்னது ஆச்சரியமா இருந்துச்சு”.. IPL final-ல் RR அணி செய்த தவறு.. சுட்டிக்காட்டிய சச்சின்..!
- IPL 2022: பெரிய தலைங்களுக்கு இடம் இல்லை... தொடரின் சிறந்த அணி… சச்சின் XI-ல் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா