'எவ்வளவு பேரோட கனவு!.. எல்லாமே போச்சா'!?. விளையாட்டு வீரர்களுக்கு இடியாக வந்த தகவல்!.. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகிறதா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் உறுதியாக நடைபெறுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஒரு தடகள வீரர், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஒரு விளையாட்டு ஊழியர் உள்பட ஆறு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே, ஆறு பேரின் அடையாளம் குறித்து அவர்கள் கூடுதல் விவரங்களை வழங்க மறுத்தனர். ஏற்கனவே, இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு சென்றுள்ள ஒரு தடகள வீரர் மற்றும் ஐந்து ஒலிம்பிக் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக பிரேசில் ஒலிம்பிக் போட்டி வீரர்கள் தங்கி இருந்த ஹமாமாஸ்து நகரில் ஒரு ஓட்டலில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் ரக்பி செவன்ஸ் அணி ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஜூலை 1ம் தேதி முதல் ஜப்பானுக்குள் நுழைந்த 8,000-க்கும் மேற்பட்டவர்களிடையே இதுவரை ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. டோக்கியோவில் தற்போது அவசர நிலை பிறபிக்கப்பட்டு உள்ளது. அங்கு நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. நகரத்தில் நேற்று மட்டும் 1,149 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது ஜனவரி மாதத்திலிருந்து மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

அதுமட்டுமின்றி, பிரேசில் ஜூடோ அணியினருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. டோக்கியோ விடுதி ஊழியர் ஒருவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தவிர 16 தடகள வீரர்கள் அடங்கிய குழு, 10 ஊழியர்கள் டோக்கியோ விமான நிலையத்தில் ஜூலை 10ம் தேதி வந்தடைந்துள்ளனர். இவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, தற்போது நடைபெறுமோ, நடைபெறாதோ என்ற கலக்கத்தில் விளையாட்டு வீரர்கள் இருக்கின்றனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்