'மழைக்கு வாய்ப்பில்லை ராஜா'... 'அதான் இவரே சொல்லிட்டாரே'... உற்சாகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா - நியூசிலாந்து போட்டி இன்று முழுவதும் நடக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 46.1 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
இதனிடையே எஞ்சியுள்ள ஆட்டம் இன்று தொடர்ந்து நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தார்கள். மேலும் ரசிகர்கள் அதே நுழைவுச்சீட்டைக் காண்பித்து இன்றைய போட்டியைக் காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இன்றைய இந்தியா - நியூசிலாந்து போட்டி முழுவதுமாக நடைபெறும் எனவும் மழை குறுக்கிட வாய்ப்பு இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே போட்டியின் போது ஒருவேளை மழை பெய்தால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற அணி என்ற அடிப்படையில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தானாகவே முன்னேறிவிடும். எனவே இன்றைய போட்டியை காண்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கேட்ச் பிடித்து அசத்திய விராட் கோலி'... 'வைரலான வீடியோ'!
- 'இந்தியா-நியூசிலாந்து போட்டி'... 'முதல் பந்திலேயே பரபரப்பு'!
- ‘கொஞ்ச நஞ்ச சேட்டையா பண்றீங்க’.. பௌலிங் செய்து கலாய்த்த கோலி..! வைரலாகும் வீடியோ..!
- ‘இந்திய அணியில் முக்கிய வீரர் மிஸ்ஸிங்’.. செமி பைனலில் இரு அணியிலும் அதிரடி மாற்றம்..!
- ‘பல வருடமா யாரும் நெருங்காத சச்சினின் மாபெரும் சாதனை’.. 27 ரன்னில் முறியடிக்க காத்திருக்கும் இந்திய அதிரடி வீரர்!
- ‘செமி பைனலில் இந்திய அணிக்கு வந்த புது சிக்கல்’.. நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய நட்சத்திர வீரர்..!
- 'அரையிறுதிப் போட்டியின்போது மழை வந்தால்'... 'யாருக்கு அதிக வாய்ப்பு'???..
- ‘அவர்களை பற்றி அப்படி சொல்வது சரியில்ல’... ‘பாகிஸ்தான் கேப்டன் கூறும் காரணம்'!
- ‘காயத்தால் செமி பைனல் வாய்ப்பை இழந்த பிரபல வீரர்’.. அணிக்கு திரும்பிய மற்றொரு விக்கெட் கீப்பர்..!
- ICC ODI Ranking: முதல் 3 இடத்தில் கலக்கும் வீரர்கள்.. முதல் 4 இடத்தில் மாஸ் காட்டும் அணிகள்!