தோனி மாதிரி பெரிய ஃபினிஷரா வரணும்.. ஆசைப்படும் 'தமிழக' இளம் வீரர்.. ஆஹா, 'சிஎஸ்கே' ஏலத்துல தூக்குனா செமயா இருக்குமே

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி போல இந்திய அணியில் சிறந்த ஃபினிஷராக வர வேண்டுமென இளம் தமிழக வீரர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

15 ஆவது ஐபிஎல் தொடர், இந்தாண்டு மார்ச் மாத இறுதியில், ஆரம்பமாகும் என கூறப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்பாக மெகா ஏலம், பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

இதற்காக, மொத்தம் 590 வீரர்களின் பெயர் பட்டியல், கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.

வீரர்கள் பட்டியல்

ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்களுக்கு 2 கோடி ரூபாய், ஆரம்ப விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, சமீப காலமாக உள்ளூர் தொடர்களில் ஜொலித்து வரும், இந்திய இளம் வீரர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

சிஎஸ்கே போடும் பிளான்

ஐபிஎல் ஏலம் நெருங்கி வருவதால், அனைத்து அணிகளும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தை  தற்போதே ஆரம்பித்துள்ளது.

கடந்த ஆண்டு, ஐபிஎல் கோப்பையைத் தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் ஏலம் தொடர்பான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இதற்காக, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூட, சமீபத்தில் சென்னை வந்திருந்தார். எந்தெந்த வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்பது பற்றியும், தோனி ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அதிரடி வீரர் ஷாருக் கான்

இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஷாருக் கான், தோனி குறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கடந்த முறை, பஞ்சாப் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடிய ஷாருக் கான், தற்போது ஏல பட்டியலில் இடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு அணிக்காக, பல போட்டிகளில் அதிரடியாக ஆடி, வெற்றியை ஷாருக் கான் தேடிக் கொடுத்ததால், நிச்சயம் அவரை அணியில் இணைக்க, ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடி இல்லாமல் ஆடுவேன்

அது மட்டுமில்லாமல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி 20 தொடரிலும், Standby வீரராக ஷாருக்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனது கிரிக்கெட் பயணம் பற்றி பேசிய ஷாருக்கான், 'நான் எப்போது பேட்டிங் செய்ய சென்றாலும், நெருக்கடியை குறித்து சிந்திக்கவே மாட்டேன். மிகவும் அமைதியாக என்னுடைய ஆட்டத்தை நான் ஆடுவேன். நமது ஆட்டம் என சிந்தித்தால், நெருக்கடி உருவாகும். அணிக்காக ஆட வேண்டும் என நினைத்தால், நெருக்கடி இருக்காது. அதனால், நான் அணிக்காக தான் எப்போதும் ஆட நினைப்பேன்' என தெரிவித்தார்.

தலை நிமிர்ந்து சொல்வேன்

தொடர்ந்து, இந்திய அணி வரை சென்றுள்ளது பற்றி பேசிய ஷாருக் கான், 'இந்திய அணிக்கான எனது பாதை தெளிவாக உள்ளது. தேர்வாளர்கள் என்னைக் கண்டு கொண்டது, மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு வருடத்திற்கு முன் கேட்டிருந்தால், நான் இந்திய அணிக்காக ஆட தயாரில்லை என்று தான் கூறியிருப்பேன்.


ஆனால், இப்போது நான் தயாராக உள்ளேன். இதை தலை நிமிர்ந்து, என்னால் சொல்ல முடியும். இந்திய அணியில் ஆடுவது என்பது மிகப் பெரிய கனவு. இந்திய அணியின் அங்கமாகி இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய கற்றுக் கொள்வதற்கு ஆவலாக உள்ளேன்' என தெரிவித்தார்.

தோனி மாதிரி வரணும்

தொடர்ந்து, தோனி பற்றி பேசிய ஷாருக் கான், 'நான் தோனியை என்னுடைய பெரிய ரோல் மாடலாக கொண்டுள்ளேன். இந்திய அணிக்காக, பல போட்டிகளை தோனி ஃபினிஷிங் செய்து வைத்தது போலவே, நானும், இந்திய அணிக்காக போட்டிகளை ஃபினிஷ் செய்ய விரும்புகிறேன். நான் எப்போதும், தோனியைப் பார்த்து, அவரை போல ஒரு ஃபினிஷர் ஆக வேண்டும் என மட்டும் தான் விரும்பியுள்ளேன்' என ஷாருக் கான் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே ரசிகர்கள்

வரவிருக்கும் மெகா ஏலத்தில், இளம் வீரர்களை சிஎஸ்கே இலக்காக வைத்துள்ளது என தகவல் வெளியாகி வரும் நிலையில், தமிழக அதிரடி வீரர் ஷாருக் கானை சென்னை அணி குறி வைத்து அணியில் எடுத்தால், நிச்சயம் சிஎஸ்கே ரசிகர்களின் உற்சாகத்திற்கு குறைவிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

MSDHONI, CHENNAI-SUPER-KINGS, SHAHRUKH KHAN, IPL AUCTION 2022, IPL 2022, IND VS WI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்