9 கோடி ரூபாக்கு வேற டீம் எடுத்தாலும்.. அவரு மனசு ஃபுல்லா 'சிஎஸ்கே' கிட்ட தான் இருக்கு.. 'ஃபீல்' பண்ணிய 'தமிழக' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம், பெங்களூரில் நேற்று ஆரம்பித்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலமும் ஆரம்பித்துள்ளது.
முதல் நாளில் பல இளம் மற்றும் அனுபவ வீரர்கள், எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு ஏலம் போயினர்.
புதிய அணிகளான லக்னோ மற்றும் குஜராத் அணிகளும், சிறப்பான வீரர்களைத் தங்களின் அணியில் தேர்வு செய்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் ஏலமும், அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் சிறப்பாக நடந்து வருகிறது. இன்றைய நாள் முடிவில், தங்களின் ஃபேவரைட் அணிகளில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பதை பார்க்கவும், ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
பின் வாங்கிய சிஎஸ்கே
கடந்த ஆண்டு ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்றைய தினத்தில் 6 வீரர்களை எடுத்திருந்தது. இதில், 5 பேர் ஏற்கனவே சிஎஸ்கே அணியில் ஆடி வந்த வீரர்கள் தான். புதிய வீரர்களை அணியில் இணைக்க விரும்பாமல், பெரும்பாலும் ஏலத்தில் அமைதியாகவே சிஎஸ்கே அணி இருந்தது. சில இளம் வீரர்களை அணியில் இணைக்க போட்டி போட்டு, கடைசியில் தொகை அதிகமானதால், பின் வாங்கியது.
அதிரடி வீரர் ஷாருக்கான்
தமிழக வீரர்கள் சிலரை சிஎஸ்கே அணி எடுக்க முயற்சி செய்தது. ஆனால், தொகையின் காரணமாக பின் வாங்கியது. அதிலும், குறிப்பாக இளம் அதிரடி வீரர் ஷாருக்கானை எடுக்க, பஞ்சாப் அணியுடன் சென்னை அணி போட்டி போட்டது. தோனிக்கு அடுத்தபடியாக, சிஎஸ்கேவில் அவரைப் போல ஒரு பினிஷர் வேண்டும் என்பதால், ஷாருக்கானை எடுக்க சிஎஸ்கே முயற்சி செய்தது.
ஆனால், இறுதியில், பஞ்சாப் அணி, ஷாருக்கானை 9 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சென்னை இளம் வீரர், சிஎஸ்கே அணியில் ஆடுவார் என ஷாருக்கானை பெரிய அளவில், ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறவில்லை.
சிஎஸ்கே மேல பாசம்
இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு ஏலம் போனது பற்றி பேசிய ஷாருக்கான், 'ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சிஎஸ்கே என்னுடைய ஃபேவரைட் அணியாக இருந்தது. நான் இப்போதும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன்.
ஏனென்றால், சென்னை மக்களுக்கு எப்போதும் சிஎஸ்கே அணி மீது, ஒரு தனி இடம் உண்டு. நான் பேசும் விதத்திலேயே சிஎஸ்கே அணி மீது என் இதயம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும், பஞ்சாப் அணிக்கு மீண்டும் திரும்புவதும் சிறந்தது தான்' என ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.
9 கோடி ரூபாய் என்னும் அதிக தொகைக்காக, பஞ்சாப் அணியில் விலை போன போதும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து, ஷாருக்கான் தெரிவித்துள்ள கருத்து, சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. ‘சின்ன தல’ மறுபடியும் டீமுக்குள் வர ஒரு வாய்ப்பு இருக்கு..?
- "அத எதுக்கு உருட்டிக்கிட்டு.." 'சிஎஸ்கே'வை கிண்டல் செய்து டெல்லி கேப்பிடல்ஸ் போட்ட ட்வீட்.. இது எல்லாம் நல்லா இல்ல
- IPL MEGA AUCTION: குட்டி AB டிவில்லியர்சை ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ்! எத்தனை கோடிக்கு தெரியுமா?
- சிஎஸ்கே அட்மினுக்கே தெரியுது.. அந்த பையனை எடுக்காம விட்டதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்.. தமிழ்நாடு வெதர்மேன் அதிருப்தி..!
- சிஎஸ்கே ப்ளேயர்ஸா பார்த்து ‘குறி’ வைக்கும் ஆர்சிபி.. முதல்ல டு பிளசிஸ்.. இப்போ இவரையும் தூக்கிட்டாங்களே..!
- தோனியின் ஆசையில் மண் அள்ளி போட்ட IPL அணி... CSK வளர்த்த பையனை கொத்தாக தூக்கிட்டாங்க! சோகத்தில் சென்னை ரசிகர்கள்
- 'சிஎஸ்கே'வில் இருந்து 'ஆர்சிபி'க்கு போன டு பிளஸ்ஸிஸ்.. "அதே நாள்'லயா இப்டி ஒரு விஷயம் நடக்கணும்.." மீண்டும் மனம் உடைந்த சிஎஸ்கே ரசிகர்கள்
- தமிழக வீரரின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற போராடிய சிஎஸ்கே.. ஆனா கடைசி வர ‘டஃப்’ கொடுத்து அந்த டீம் தட்டிட்டு போயிடுச்சு..!
- போன ஐபிஎல் சீசனில் வைரலான வீரரை.. கட்டம் கட்டி தூக்கிய 'சிஎஸ்கே'.. செம 'குஷி'யில் ரசிகர்கள்
- இளம் வீரரை எடுத்ததும் கைதட்டி கொண்டாடிய மும்பை அணி.. அதுவும் 15.25 கோடிக்கு எடுத்துருக்காங்க.. யாருப்பா அந்த பையன்