'200 டெஸ்ட்டில் சச்சின் செய்த சாதனையை'... '66 டெஸ்ட்டில் சமன் செய்த வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், சச்சின் டெண்டுல்கரின் சிக்சர் சாதனையை, குறைந்தப் போட்டிகளில் சமன் செய்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி.
இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது காலேவில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 249 ரன்கள் குவித்தது. இதில் நியூசிலாந்து அணியை சேர்ந்த டிம் சவுதி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஒரு சிறப்பான சாதனையை படைத்தார். தனஞ்செய டி சில்வா வீசிய பந்தில், அவர் மெகா சிக்சர் ஒன்றை விளாசினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 சிக்சர்களை விளாசிய பெருமையை பெற்றார். இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின், 200 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று மொத்தம் 69 சிக்சர்களை அடித்து உள்ளார். ஆனால் டிம் சவுதி 66 போட்டிகளில் விளையாடி 69 சிக்சர்கள் விளாசி சச்சின் சாதனையை சமன் செய்தார். சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்கல்லம் 107 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், கில்கிரிஸ்ட் 100 சிக்ஸர்களுடன் 2-வது இடத்திலும், கெயில் 98 சிக்ஸர்களுடன் 3-வது இடத்திலும், காலிஸ் 97 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், சேவாக் 91 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
‘ஸ்கூலுக்கு வரும் போது டீச்சர்ஸ் இத கட்டாயம் ஃபாலோ பண்ணனும்’.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஸ்லோ ஓவர் ரேட், இனி யாருக்கும் தடை இல்லை'... ஆனால், ஐசிசி புதிய விதி'!
- Top 4: 'செமி ஃபைனலுக்கு போகப்போறது இந்த 4 டீம்தான்... ஆனா' ... சூடு பிடிக்கும் உலகக்கோப்பை களம்!
- ‘அப்படியே சச்சின் ஆடுறத பாக்கற மாதிரியே இருக்கு..’ பிரபல வீரரைப் புகழ்ந்த பயிற்சியாளர்..?
- முறியடிக்க முடியாத சச்சினின் 16 வருட சாதனை - காத்திருக்கும் சவால்.. முறியடிப்பாரா கோலி..?
- ‘பிரதமருக்கே லஞ்சம் கொடுத்த 11 வயது சிறுமி’!