"அந்த நேரம் எனக்குள்ள 'பயமே' வந்துருச்சு.." பேட்டிக்கு நடுவே 'கண்ணீர்' விட்டு அழுத 'KKR' வீரர்.. மனதை உருக வைத்த 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் சீசன் நடைபெற்று வந்த நிலையில், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதில், முதலாவதாக கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்திக்கு தான் கொரோனா தொற்று உறுதியானது. அதன் பிறகு, அதே அணியிலுள்ள சந்தீப் வாரியருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து, சென்னை, டெல்லி மாற்றம் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாக, ஐபிஎல் போட்டிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது.

அதன் பிறகும், சில வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதில், கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டும், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட, அவர் இந்தியாவிலேயே தங்கியிருந்து, இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவருக்கு நெகடிவ் என முடிவுகள் வந்த நிலையில், கடைசி வெளிநாட்டு வீரராக அவர் நியூசிலாந்து கிளம்பிச் சென்றார்.

நியூசிலாந்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள டிம் செய்ஃபெர்ட், தனது கொரோனா அனுபவம் குறித்து மிகவும் உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், 'அணியிலுள்ள அதிகாரி ஒருவர் எனக்கு பாசிட்டிவ் என சொன்னதும், ஒரு நிமிடம் உலகமே நின்றது போல தோன்றி விட்டது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய பயமும் உருவாக ஆரம்பித்தது. அந்த தருணம் மிகவும் பயங்கரமாகவும் இருந்தது. எனக்கு ஏதோ கெட்ட விஷயம் நடக்கப் போவதாகவும் உணர்ந்தேன்' என பேசிக் கொண்டு இருக்கும் போதே, அந்த கடினமான நாட்களை நினைத்து திடீரென கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தார் டிம் செய்ஃபெர்ட்.

 

தொடர்ந்து பேசிய செய்ஃபெர்ட், 'நான் கொரோனாவில் இருந்து மீள்வதற்கு மெக்கல்லம் மற்றும் ஸ்டீபன் பிளம்மிங் ஆகியோர் மிக முக்கிய காரணமாக அமைந்தனர். அவர்கள் எனது பயத்தைப் போக்க உதவினர். அதே போல, கொல்கத்தா மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகத்தினரும் எனக்கு நம்பிக்கை கொடுத்தனர். பின்னர் என்னை வீட்டிற்கு அனுப்பி வைக்கவும் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டனர்' என டிம் செய்ஃபெர்ட் தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்