வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட பாலியல் சர்ச்சை - டிம் பெய்னின் நிலைமை என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் டிம் பெய்ன். இன்னும் ஒரு சில நாட்களில் கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் ஆரம்பமாகிறது. அதற்கு டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முழு வீச்சில் தயாராகி வந்தது. அந்த நேரத்தில் ஒரு மாபெரும் சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகமும், அணி நிர்வாகமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

Advertising
>
Advertising

கடந்த 2017 ஆம் ஆண்டு டிம் பெப்ன், தன் அணி நிர்வாகத்தில் இருந்த பெண் ஊழியர் ஒருவருக்கு தன் பிறப்புறுப்பு சார்ந்த சர்ச்சைப் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும் அந்தப் பெண் ஊழியரோடு தகாத வார்த்தைகளில் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த தகவல் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தொடர்ந்து டிம் பெய்ன் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் அவர் அனுப்பிய பாலியல் தொந்தரவுக்குரிய குறுஞ்செய்திகள் அடங்கிய ஸ்கிரீன் ஷாட்களும் வெளியாகி கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியடையச் செய்தது.

இப்படிப்பட்ட சூழலில் தான் ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் முதல் முறையாக பெய்ன் குறித்து வாய் திந்த்து பேசியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த லாங்கர், பெய்ன் குறித்து பல விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர், ‘என்ன நடந்ததோ அதை நினைத்து நான் மிகவும் வருந்துகின்றேன். நானும் அவரும் இந்த ஆஸ்திரேலிய அணிக்காக பல்வேறு பயணங்களை மேற்கொண்டு உள்ளோம். கிரிக்கெட்டில் நான் சந்தித்த மிகச் சிறந்த நபர்களில் பெய்னும் ஒருவர். நடந்ததால் அவர் மிகவும் ஸ்திம்பித்துப் போய் செய்வதறியாது தவிக்கிறார். கடந்த நான்கு ஆண்டு காலமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகவும் முக்கியப் புள்ளியாக இருந்தவர் பெய்ன்’ என்று கூறியுள்ளார்.

டிம் பெய்னின் பாலியல் சர்ச்சை குறித்தான விவகாரம் தனக்கு முன்னரே தெரிந்திருந்தது என்றும் அதிர்ச்சி கொடுத்துள்ளார் லாங்கர். அது பற்றி அவர், ‘உண்மையில் டிம் பெய்ன் தற்போது சம்பந்தப்பட்டிருக்கும் விஷயம் பற்றி எனக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும். இங்கிலாந்துக்குச் செல்ல ஒரு முறை பேருந்தில் ஏறிய போது, இது குறித்து டிம் பெய்னே என்னிடம் வெளிப்படையாக பேசினார். அத்தோடு அது பற்றி நானும் பேசவிலை, அவரும் பேசவில்லை. இப்போது எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அது குறித்த செய்திகளும், அது ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்களும் தெரிய வந்துள்ளது’ என்று பதிவு செய்துள்ளார்.

பாலியல் சர்ச்சை குறித்தான செய்திகள் வந்தவுடன், டிம் பெய்ன் தனது தலைமை பொறுப்பை ராஜினாமா செய்தார். கிரிக்கெட் விளையாடுவதில் இருந்தும் காலவரையற்ற பிரேக் எடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் ஆஸ்திரேலிய நிர்வாகம், டிம் பெய்ன் சம்பந்தப்பட்ட பாலியல் சர்ச்சை விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைத்துள்ளது.

முடிவாக லாங்கர், ‘நாம் ஒரு மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அனைவரும் மிகவும் கச்சிதமாக இருக்க வேண்டும் என்று கருதுகிறோம். யாராவது எதாவது தவறு செய்தால், அதை ஏற்றுக் கொள்ளவோ மன்னிக்கவோ நாம் வாழும் சமூகத்தில் மனமில்லாமல் போய்விட்டது. எங்கள் கேப்டன் தவறு செய்துவிட்டார். அதற்கான மிகப் பெரிய விலையை அவர் கொடுத்து வருகிறார். வாழ்க்கையைப் பொறுத்தவரை நீங்கள் தவறுகள் இழைத்தாலும், அதிலிருந்து பாடம் கற்று முன்னேர வேண்டும்’ என்று செய்தியாளர்களுக்கு அறிவுரை கொடுக்கும் நோக்கில் பேசி முடித்தார்.

CRICKET, TIM PAINE, SEXTING SCANDAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்