"ஒரு கேப்டனே இப்டி பண்ணலாமா??... உங்க வாயால நீங்களே மாட்டப் போறீங்க..." வசமாக சிக்கிய ஆஸ்திரேலிய 'கேப்டன்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கடைசி நாளில் சிறப்பாக ஆடி போட்டியை டிரா செய்ய வைத்தது.

ஆறாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த அஸ்வின் - ஹனுமா விஹாரி இணை நீண்ட நேரம் களத்தில் நின்று விக்கெட்டுகள் எதுவும் விழாமல் போட்டி டிராவில் முடிய உதவி செய்தனர். அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் விளையாட்டை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், போட்டிக்கு நடுவே ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்களிடம் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர்.

அதிலும் குறிப்பாக, அஸ்வினை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் சீண்டியது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. பதிலுக்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருந்தாலும், அதன்பிறகு டிம் பெயின் அஸ்வினை தகாத வார்த்தையால் பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக, ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியிருந்த ஆடியோவும் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து பல முன்னாள் வீரர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்த தொடர் முடிவடைந்ததும் டிம் பெயினை ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலக்க வேண்டும் எனவும், அவர் கேப்டனாக இருக்க தகுதியற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், டிம் பெயின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ட்வீட் ஒன்றையும் செய்துள்ளார். மேலும், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலரும் டிம் பெயினுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

 

டிம் பெயினின் இந்த செயலுக்கு நிச்சயம் ஐசிசி தண்டனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்