இளம் வீரரின் இடத்துக்கு ஆபத்து.. 3 வீரர்கள் போட்டி.. மொயின் அலி வருகையால் மாறும் ஆர்டர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே ஆல்ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக விளையாட வாய்ப்பு உள்ள மூன்று வீரர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இளம் வீரரின் இடத்துக்கு ஆபத்து.. 3 வீரர்கள் போட்டி.. மொயின் அலி வருகையால் மாறும் ஆர்டர்..!
Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரில் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதனை அடுத்து வரும் 31-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடவுள்ளது.

இந்த சூழலில் காயம் காரணமாக ஓய்வில் உள்ள சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தீபக் சஹார் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என சொல்லப்படுகிறது. இதனிடையே விசா சிக்கலால் காலதாமதமான இங்கிலாந்து வீரர் மொயின் அலி சமீபத்தில் சிஎஸ்கே அணியுடன் இணைந்துள்ளார்.

Three players who can replace Shivam Dube in CSK XI

அதனால் சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் லெவனில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் இளம் வீரர் சிவம் துபேவுக்கு மாற்றாக வேறு வீரர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இளம் வீரர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் அல்லது கே.எம்.ஆசிப்  அல்லது தென் ஆப்பிரிக்க வீரர் டுவைன் பிரிட்டோரியஸ் ஆகிய 3 பேரில் ஒருவர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக நடந்து முடிந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துவே இடம் பெற்றிருந்தார். பேட்டிங்கில் 6 பந்துகளை எதிர்கொண்டவர் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் பவுலிங்கில் 1 ஓவர் வீசி 11 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதனால் அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

CSK, IPL, SHIVAMDUBE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்