‘இக்கட்டான சூழல்ல அஸ்வின் தான் கைகொடுப்பாரு… அவரு எனக்கான பலம்!’- உருகும் நட்சத்திர வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

‘எந்தவொரு போட்டியாக இருந்தாலும் எதிர் அணியை தாக்குறதுக்கு அஸ்வின் தான் சரியான ஆளு’ என இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆன அஸ்வின் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் டி20 இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

Advertising
>
Advertising

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டின் குறுகிய கால போட்டிகளில் விளையாடத் தொடங்கி உள்ளார் அஸ்வின் ரவிச்சந்திரன். டி20 உலகக்கோப்பை தொடரின் மூலமாக அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான ஜெய்பூர் போட்டியில் தனக்கான இடத்தை நிலை நிறுத்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே ஆடும் 11 வீரர்கள் அணிப் பட்டியலில் இடம் பிடித்த அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2-வது ராஞ்சி போட்டியிலும் சொற்ப ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அஸ்வினின் அபாரமான பந்துவீச்சு நியூசிலாந்து வீரர்கள் ரன்கள் எடுப்பதை கட்டுக்குள் வைக்க உதவியது.

இந்நிலையில் அஸ்வின் குறித்து இந்திய டி20 அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், “ஒரு கேப்டனாக எப்போதுமே எதிர் அணியை தாக்க வேண்டுமானால் நான் முதலில் அஸ்வினைத் தான் கூப்பிடுவேன். அஸ்வின் மாதிரி ஒருத்தர் இருக்கும் போது எதிர் அணியை மிடில் ஆர்டரில் சறுக்கி விடலாம். அஸ்வின் தான் பல இக்கட்டான சூழலில் எனக்கு பெரிய பலம் ஆக இருப்பார். எதிர் அணியின் ரன் வேட்டையைக் குறைக்க அஸ்வின் தான் சரியான ஆள். முக்கியமான மிடில் ஆர்டரை சறுக்கவிட அஸ்வினின் பந்துவீச்சு உதவும். அஸ்வினுக்கு தற்போது துபாய் தொடரில் இருந்தே சிறப்பான கம்-பேக் அமைந்துள்ளது. தரமான பவுலர் என்றால் அது அஸ்வின் மட்டும் தான்.

கடந்த பல ஆண்டுகளில் சிவப்பு பந்துகளில் தன்னை பலமுறை நிருபித்து இருக்கிறார். வெள்ளைப் பந்துகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். விக்கெட் வேண்டுமென்றால் அஸ்வினை இறக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். அதையே எனக்கு அஸ்வினும் செய்து கொடுத்து வருகிறார். ஒன்று பேட்ஸ்மேனை வெளியேற்றிவிடுவார், இல்லையென்றால் பேட்ஸ்மேன் மீது கடுமையான அழுத்தத்தை அஸ்வினின் பந்துகளால் கொடுக்க முடியும்.

தற்போதைக்கு அணியில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டும் என விரும்புகிறோம். வீரர்களுக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். அப்போதுதான் அவர்கள் பயம் இல்லாமல் வெளியில் சென்று விளையாட முடியும். அணிக்காக யார் எந்த நல்ல விஷயம் செய்தாலும் அது நிச்சயம் அங்கீகரிக்கப்படும் என்றும் மட்டும் அணிக்கு உறுதி செய்துள்ளோம். ஒரு கேப்டன் மற்றும் தலைமைப் பயிற்சியாளரின் கடமையாக இதை நினைக்கிறேன். இந்த சீரிஸ் வெற்றி எங்களுக்கு பந்துவீச்சாளர்களால் சாத்தியமானது” எனக் கூறியுள்ளார்.

CRICKET, ASHWIN, ROHIT SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்