‘ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கல’.. ஒரே போட்டோவில் வைரலான ‘RCB’ வீரர் திடீர் அறிவிப்பு.. என்ன காரணம்..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஐபிஎல் ஏலத்தில் கலந்துக்கொள்ளவில்லை என அறிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனுக்கான வேலைகளில் பிசிசிஐ மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரு புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

வீரர்கள் பட்டியல் வெளியீடு

இதனிடையே ஐபிஎல் ஏலத்துக்கு தகுதி பெற்றுள்ள வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. மொத்தம் 1214 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் 228 பேர் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும், 355 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் பங்கேற்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

விலகிய ஆர்சிபி வீரர்

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய நியூஸிலாந்து வீரர் கேல் ஜேமிசன் மெகா ஏலத்தில் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 12 மாதங்களாக தனிமைப்படுத்துதால், பயோ-புபுள் என மன உளைச்சல் தரும் விஷயங்கள் இருந்து வருகின்றன.  அடுத்த 12 மாதங்களுக்கான கிரிக்கெட் அட்டவணையைப் பார்க்கும் போது, அந்த நேரத்தை ஐபிஎல் தொடரில் செலவிடுவதை விட வீட்டில் இருப்பது நல்லது என்று முடிவெடுத்துள்ளேன்.

காரணம் என்ன?

அதேபோல் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில், நான் எங்கு இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அந்த இடத்துக்கு இன்னும் நான் முன்னேறி வரவில்லை. அனைத்து வடிவங்களுக்கும் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு முழுநேர நியூசிலாந்து வீரனாக மாற பயிற்சி மேற்கொள்ள கால அவகாசம் தேவை என்று நினைக்கிறேன். வருடம் முழுதும் எங்காவது ஆடிக்கொண்டிருக்க விருப்பமில்லை. குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், என் கிரிக்கெட் ஆட்டத்தை முன்னேற்றுவதும் மிக முக்கியமாகக் கருதுகிறேன்’ என கேல் ஜேமிசன் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேல் ஜேமிசனை, 15 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தது. அந்த அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். இந்த சூழலில் ஐபிஎல் ஏலத்தில் இருந்து அவர் விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான போட்டோ

அதேபோல் கடந்த ஆண்டு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வி பெரும் நிலையில் இருந்தது. அதனால் பெவிலியனில் அமர்ந்திருந்த பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் சோகமாக அமர்ந்திருந்தனர். அப்போது கேல் ஜேமிசன் அணியில் பெண் பிசியோவிடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். அந்த போட்டோ அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

RCB, IPL, KYLEJAMIESON, IPLMEGAAUCTION2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்