இன்னைக்கு கேன் வில்லியம்சன் மட்டும் ‘அதை’ பண்ணிட்டார்னா.. மும்பை ‘ப்ளே ஆஃப்’ கனவை மறந்து விட வேண்டியதுதான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத்தை எதிர்த்து மும்பை விளையாடுகிறது.

ஐபிஎல் (IPL) தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகின்றன. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்-மும்பை இந்தியன்ஸ் (SRHvMI) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-டெல்லி கேப்பிடல்ஸ் (RCBvDC) ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த இரு போட்டிகளும் இன்று இரவு 7:30 மணியளவில் நடைபெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டு லீக் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெறுவது இதுதான் முதல்முறை.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் ப்ளே ஆஃப் (PlayOffs) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதனை அடுத்து ப்ளே ஆஃப் ரேஸில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளன.

இதில் கொல்கத்தா அணி நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றி பெற்றது. இதனால் அந்த அணியின் நெட் ரன்ரேட் உயர்ந்துள்ளதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

ஒருவேளை நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா தோல்வியை தழுவி இருந்தால், மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் கொல்கத்தா அணி இதை தவிடுபொடியாக்கியது.

இந்த நிலையில் இன்றைய ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஒரே ஒரு வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த வெற்றி 171 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் இருக்க வேண்டும். அதற்கு மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் அடித்தாக வேண்டும்.

ஒருவேளை ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் (Kane Williamson) டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால், மும்பை அணியின் ப்ளே ஆஃப் கனவு அப்போதே முடிந்துவிடும். அதனால் இன்றைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்