ஏகப்பட்ட 'ரிஸ்க்'.. எக்கச்சக்க 'அமவுண்ட்'.. அஸ்வினை வாங்கியது ஏன்?.. 'உடைந்த' ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதனால் ஐபிஎல் தொடர்பான செய்திகள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் லேட்டஸ்ட் செய்தி அஸ்வினை பஞ்சாப் அணி டெல்லி அணிக்கு விற்பனை செய்தது தான். இதற்காக 1.5 கோடிகளை அஸ்வினுக்கு கொடுத்து உள்ளூர் வீரர் ஜகதீசா சுச்சித் என்ற வீரரையும் விட்டுக்கொடுத்து டெல்லி அணி அஸ்வினை வாங்கியது.

இதுதவிர பஞ்சாப் அணி அஸ்வினை ஏலத்தில் எடுத்த 7.6 கோடிகளும் அஸ்வினுக்கு கிடைக்கும். மொத்தம் சுமார் 9.1 கோடிகள் இதன் வழியாக அவருக்கு கிடைக்கும். எனினும் 2020-ம் ஆண்டு அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளதால், 1 ஆண்டு மட்டுமே அஸ்வின் டெல்லி அணியில் இருப்பார். இதனால் எதற்காக அஸ்வினை இவ்வளவு கோடிகள் கொடுத்து வாங்கினார்கள் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது.

இந்தநிலையில் அதற்கான பதில் தற்போது வெளியாகி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் சொந்த மைதானமான பெரோஸ் ஷா கோட்லாவின் ஆடுகளம் தான் என கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் பந்துவீசி எதிரணி வீரர்களை நிலைகுலையச் செய்யும் அனுபவ வீரர்கள் யாரும் டெல்லி அணியில் இல்லை. அந்த குறையை தற்போது அஸ்வினை எடுத்து டெல்லி அணி தீர்த்துக்கொண்டது.

இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்,'' அஸ்வின் எந்த அணியில் இருந்தாலும் அந்த அணிக்கு அதிக மதிப்பு சேர்ர்ப்பார். டெல்லி ஆடுகளத்தில் அவர் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்,'' என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்