'ஆஸி பண்ணுன பெரிய தப்பே இதான்'.. பாண்ட்யா விஷயத்தில் சச்சின் பேசிய வைரல் கமெண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, உலக கோப்பையில் இந்திய அணி நேற்று விளையாடியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா செய்த தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டி முன்னாள் கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார்.

சர்வதேச உலகக் கோப்பை தொடரின் 14 ஆவது லீக் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் களமிறக்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் சீராக விளையாடினர்.இவர்களைத் தொடர்ந்து ஷிகர் தவான் மற்றும் கோலி பார்ட்னர்ஷிப்பை ஸ்கோரை அதிரடியாக உயர்த்தியது. அதிலும் ஷிகர் தவான் சதம் அடித்ததோடு, 109 பந்துகளில் 117 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

இதற்குப்பின் களமிறக்கப்பட்டவர்தான் ஹர்திக் பாண்டியா. ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா முதல் பந்தை எதிர்கொண்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து விட்டார். எனினும் அந்த கேட்சை நழுவ விட்டது பாண்ட்யாவுக்குத் தொடர்ந்து ஏறுமுகமாக அமைந்தது. அதன்பின் அதிரடியாக 27 பந்துகளில் 48 ரன்களை பாண்டியா எடுத்தார். இந்த நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா செய்த தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

அதில் ஹர்திக் பாண்டியா போன்றதொரு வீரருக்கு ஆட்டத்தின் போது இரண்டாவது வாய்ப்பு வழங்கினால்,  அவர் ஆட்டத்தின் போக்கையே திசை மாற்றி விடுவார். அந்த கேட்சை நழுவவிட்டதுதான் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் கேரி செய்து விட்ட மிகப்பெரிய தவறு என்றும் ஷிகர் தவானுக்கு பிறகு தோனி அல்லது ஹர்டிக் பாண்ட்யா களமிறக்கப்பட வேண்டும் என்று, தான் முன்னமே நினைத்தது போல் ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டது சரியான முடிவுதான் என்றும் சச்சின் பேசியுள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, SACHINTENDULKAR, HARDIKPANDYA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்