லிவிங்ஸ்டனுக்கு முன்னாடியே கெத்து காட்டிய CSK வீரர்.. இப்ப வரை அப்படியொரு சிக்ஸ் யாருமே அடிக்கல..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் நீண்ட தூரம் அடித்த சிக்சர் சாதனையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் முன்னிலையில் உள்ள சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத அணி 143 ரன்கள் அடித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 16 ஓவர்களில் 145 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு மிக நீண்ட சிக்ஸரை விளாசினார். கிட்டத்தட்ட 117 மீட்டர் நீளத்திற்கு சென்றது. இதைப் பார்த்து குஜராத் அணி வீரர்களே வியந்து பார்த்தனர். நடப்பு ஐபிஎல் சீசனின் மிக நீண்ட சிக்சராக இது சாதனை படைத்தது. மேலும் ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட மிக நீண்ட சிக்சர்களின் டாப் 10 பட்டியலுக்கு உள்ளே நுழைந்தது.

ஆனால் இந்த பட்டியலில் 14 ஆண்டுகளாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அல்பி மோர்கல் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனை இன்னும் யாராலும் முறியடிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பிரக்யான் ஓஜா வீசிய பந்தை 125 மீட்டர் சிக்சராக விளாசி அனைவரையும் மிரள வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

CSK, IPL, ALBIE MORKEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்