ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய அசத்தல் வீரர்... சாதனைகளை மிஞ்சும் சாதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், நியூசிலாந்து அணியின் சுழற் பந்து வீசாளர் அஜாஸ் படேல், ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

Advertising
>
Advertising

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இப்படியான சாதனையை செய்யும் மூன்றாவது பவுலர் படேல் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜிம் லேகர், மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆகியோர் மட்டுமே ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் இப்படியான இமாலய சாதனையைப் புரிந்திருக்கும் படேல், அதே நகரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த சாதனை பற்றி அஜாஸ் கூறுகையில், ‘இந்த சாதனை எனக்கு மனத் திருப்தியைத் தந்துள்ளது. எனது நெடுநாள் கனவு பலித்துள்ளது. களத்தில் விளையாடி இப்படியான சாதனையைப் புரிவது மிகவும் திருப்தியளிக்கக் கூடியது’ என்று நெகிழ்ந்துள்ளார்.

பலரும் அஜாஸின் சாதனை பற்றி கூறியிருந்தாலும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் சுழற் பந்து வீச்சாளருமான டேனியல் வெட்டோரி மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோரின் வாழ்த்துகள் கவனம் பெற்றுள்ளன. வெட்டோரி, ‘அஜாஸின் சாதனை, நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு அவர் கொடுத்திருக்கும் மிகப் பெரிய கவுரவம்’ என்றுள்ளார்.

சக சாதனையாளரான அனில் கும்ப்ளே, ’பெர்ஃபெக்ட் 10 கிளப்புக்கு உங்களை வரவேற்கிறேன் அஜாஸ். டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளது மேலும் சிறப்பு வாய்ந்தது’ என்று புகழ்ந்து ட்வீட்டியுள்ளார்.

CRICKET, AJAZ PATEL, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்