“சொந்த வீடு கூட இல்ல”.. ‘IPL-ல செலக்ட் ஆனதும் அம்மா, அப்பா கண்ணீர் விட்டு அழுதுட்டாங்க’ .. வெளியான இளம் MI வீரரின் உருக்கமான பின்னணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசொந்த வீடுகூட இல்லாமல் சிரமப்பட்டுதான் கிரிக்கெட் விளையாடி ஐபிஎல் தொடரில் இடம் பிடித்ததாக இளம் வீரர் உருக்கமாக பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டு முதல் மொத்தம் 10 அணிகள் மோதுவதால் ஆட்டம் பரபரப்பாக காணப்படுகிறது. அதேபோல் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் திலக் வர்மா, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். ஹைதராபாத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். மேலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் மெகா ஏலத்தில் 1.7 கோடி ரூபாய்க்கு மும்பை அணி இவரை போட்டி போட்டு எடுத்தது.
அதன்படி ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் போட்டியில் 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தார். இதனை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மா, பொல்லார்டு போன்ற முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான வேளையில், நிதானமாக விளையாடி 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதனால் தற்போது மும்பை அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனது குடும்பப் பின்னணி குறித்து திலக் வர்மா உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதில், ‘பொருளாளர் ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் நான் வளர்ந்தேன். எனது தந்தையின் மிகவும் குறைவான சம்பளத்தில் எனது கிரிக்கெட் பொருட்களை வாங்குவதற்கும், என் தம்பியின் படிப்பு செலவுக்கு போதவில்லை. அதனால் கடந்த சில வருடங்களாக நான் விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் கிடைக்கும் பணம் மற்றும் ஒரு சிலரின் குறைந்த ஸ்பான்சர்ஷிப் தொகை மூலமாகவே என் கிரிக்கெட் செலவை பார்த்துக் கொள்கிறேன்.
எங்களுக்கு இன்னமும் சொந்த வீடு கிடையாது. அதனால் ஐபிஎல் தொடரில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதை வைத்து முதலில் என் தாய், தந்தைக்கு ஒரு வீடு வாங்கி கொடுப்பேன். ஐபிஎல்-ல் கிடைக்கும் பணம் என் வாழ்நாளில் நல்ல கிரிக்கெட் விளையாட உதவும் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது நான் என் பயிற்சியாளருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது என்னை ஐபிஎல் அணிகள் வாங்க தொடங்கியதும், பயிற்சியாளர் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டார். அதன்பின்னர் இந்த செய்தியை என் பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். குறிப்பாக என் அம்மா ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் உணர்ச்சியில் வாயடைத்துப் போனார்’ என திலக் வர்மா உருக்கமாக பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சிஎஸ்கே டீம்ல இருக்குற பெரிய பிரச்சனை இதுதான்’.. இளம் வீரருக்கு ஸ்பெஷல் அட்வைஸ்.. ரவி சாஸ்திரி ஓபன் டாக்..!
- ‘கேன் வில்லியம்சன் அவுட் சர்ச்சை’.. பிசிசிஐ வரை சென்ற விவகாரம்.. என்ன நடந்தது..?
- தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
- KKR vs PBKS : ஒரே ஓவரில் Beast மோடில் ரஸ்ஸல் காட்டிய அதிரடி.. நொறுங்கிப்போன ஓடியன் ஸ்மித்..!
- "பிட்ச்ல நயாகரா அருவி மாதிரி கொட்டுது.. இதுல எங்கிட்டு".. CSK தோல்விக்கு இதுதான் காரணமா? போட்டு உடைத்த பிளெமிங்..
- "நீங்க இப்படி பண்ணா, ஜடேஜா நெலம என்ன ஆகுறது??.." தோனியை எச்சரிக்கும் முன்னாள் வீரர்கள்.. 'CSK'வில் அடுத்த தலைவலி?
- சூப்பர் அப்டேட் கொடுத்த சிஎஸ்கே கோச்.. அப்படின்னா அடுத்த மேட்ச்ல இவரை பாக்கலாம் போலயே..!
- "எதுக்கு இவ்ளோ ஆக்ரோஷம்??.." CSK'வுக்கு எதிரான போட்டியில்.. கவுதம் கம்பீர் செய்த காரியம்..
- ஏன் 19-வது ஓவரை சிவம் துபேவுக்கு கொடுத்தீங்க..? எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி.. சிஎஸ்கே கோச் சொன்ன காரணம்..!
- Virat Kohli : கேட்சை பிடிச்சுட்டு வித்தியாசமான ரியாக்ஷன் கொடுத்த கோலி.. வைரலாகும் Pic..!