'சும்மா கிழி'யென பொளந்துக்கட்டிய டாம் பாண் ட்டன்... 5 பந்துகளில் 5 சிக்ஸர்... சிக்கி சின்னாபின்னமானது 'சிட்னி' தண்டர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் டி20 தொடரில் பிரிஸ்பன் ஹீட், சிட்னி தண்டர் அணிகள் மோதின. அதில்  இங்கிலாந்து அதிரடி வீரர் டாம் பான்ட்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து பிக் பாஷ் கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார்.

இவர் 16 பந்துகளில் அரைசதம் கண்டார், இதற்கு முன்பாக கிறிஸ் கெய்ல் 12 பந்துகளில் அரைசதம் கண்டதுதான் இன்று வரை பிக்பாஷ் அதிவிரைவு அரைசதமாக இருந்து வருகிறது.

மழை காரணமாக 8 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்ட போட்டியில் பிரிஸ்பன் ஹீட் அணி 119 ரன்களை விளாசியது. இந்த அணிக்காக இறங்கிய இங்கிலாந்து டி20 ஸ்பெஷலிஸ்ட் டாம் பான்ட்டன் இன்னிங்சின் 4வது ஓவரில் சும்மா கிழி என பந்தை கிழித்தார். இதற்கு சிக்கியவர் சிட்னி தண்டர் அணியின் ஆப் ஸ்பின்னர் அர்ஜுன் நாயர்.

ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவுமில்லை. பந்துவீச்சின் பதத்தை அறிந்துக்கொண்ட டாம் அடுத்த 5 பந்துகளையும் அடித்து துவம்சம் செய்தார்.  அர்ஜுன் நாயர் ஓவர் கிழித்துத் தொங்க விடப்பட்டது.

கிறிஸ் லின் தன் பங்குக்கு 13 பந்துகளில் 31 ரன்கள் வெளுத்துக்கட்ட, பான்ட்டன், லின் ஜோடி 5 ஓவர்களில் 90 ரன்களை குவித்தனர். பான் ட்டன் 19 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார்.

 

சிட்னி தண்டர் இன்னிங்சில் 5 ஒவர்களாக ஆக்கப்பட்ட போதும், அந்த அணி 61/4 என்று முடிந்து 16 ரன்க்ள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வரும் ஐபிஎல் தொடரில் பான்ட்டன் ஆடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TOM BANTON, SIXER, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்