'நான் சொல்ல வர்றத...' 'முடிஞ்சா கண்டுபிடிங்க பாப்போம்...' 'முன்னாள் வீரர் ஷேர் செய்த ஃபோட்டோ...' - மண்டைய போட்டு பிச்சிக்கும் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் சில போட்டியாளர்களை சேர்க்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் குறியீடாக சொன்னதை இணையத்தில் பலர் டீகோடிங் செய்து வருகின்றனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது முடிந்த இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து முறையே 1-1 என்ற முறையில் வெற்றி பெற்றுள்ளது

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இதற்கு காரணம் இந்திய அணி பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ ஆகியோரின் பார்ட்னர்ஷிப்பை கட்டுபடுத்த தவறியது தான் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாளை நடைபெறவிருக்கும் மூன்றாவது போட்டியில், டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் இழந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்தும், முழு தொடரையும் கைப்பற்றும் நோக்கில் இந்திய அணியும் தயாராகி வருகிறது.

இரண்டாவது நாள் பவுலிங்கில் நடந்தது போல் நாளை நடைபெறாமல் இருக்க பல இந்திய முன்னாள் வீரர்கள் பவுலிங்கில் மாற்றம் தேவை என தெரிவித்து வருகின்றனர்.

                                    

இந்நிலையில் வசீம் ஜாஃபரும் தன் ட்விட்டர் பக்கத்தில் இலைமறை காயாக சம்பந்தமே இல்லாதது போன்ற புகைப்படம் ஒன்றை போட்டு சில வாசகத்தையும் கூறி ரசிகர்களை பெரிதும் குழப்பியுள்ளார்.

                           

அவரது ட்விட்டரில், 'Chess players can be seen in the late afternoon sun in Washington Square Park in Greenwich Village, Manhattan, NY' என ட்வீட் செய்துள்ளார்.

                                

இதை டீகோடிங் செய்யும் போது, chess Player எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சஹாலை எனவும், அவர் கிரிக்கெட்டிற்கு வருவதற்கு முன்னர் செஸ் ப்ளேயராக இருந்தார். New york எனக்குறிப்பிடப்பட்டிருப்பது வாஷிங்டன் சுந்தர், மற்றும் Sun எனக்கூறியிருப்பது சூர்யகுமார் யாதவ் ஆகும். இவர்கள் மூவரை அணிக்குள் சேர்க்க வேண்டும் என்பதை அவர் சுற்றி வளைத்து கூறுவதாக சொல்கின்றனர் அவரின் ரசிகர்கள்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்