'தெறிக்கவிட்ட பும்ரா...' 'ஒயிட்வாஷ் செய்து ஓட விட்ட இந்திய அணி...' நியூசிலாந்து மண்ணில் புதிய சாதனை...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து அணிக்கெதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா, 60 ரன்களும் கே.எல்.ராகுல் 45 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.

நியூஸிலாந்து தரப்பில் ராஸ் டெய்லர் 53 ரன்களும் விக்கெட் கீப்பர் ஷெய்ஃபெர்ட் 50 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஷைனி மற்றும் ஸ்ரதுல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். நியூஸிலாந்து மண்ணில் அந்த அணி இந்திய அணி ஒயிட்வாஷ் செய்வது இதுவே முதல்முறையாகும். அதேபோல், டி20 வரலாற்றில் 5 போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றது.

கடந்த உலக கோப்பை போட்டியில், அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு  ஒயிட்வாஷ் செய்து பழிதீர்த்து கொண்டது.

CRICKET, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்