அடுத்தவர் மனைவியை திருமணம் செய்த புகார்.. சிக்கலில் பிரபல கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்காளதேச கிரிக்கெட் வீரர் நசீர் ஹொசைன், தனது மனைவியை சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு நபர் கூறியதை அடுத்து, கள்ள தொடர்புக்  குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தவர் மனைவியை திருமணம் செய்த புகார்.. சிக்கலில் பிரபல கிரிக்கெட் வீரர்!
Advertising
>
Advertising

வங்காளதேசத்தில் தகாத உறவு பற்றி வழக்கு மிகவும் அரிதாகவே நடைபெறும். தகாத உறவு தொடர்பான சிக்கலில் முதலில் பெண்களை விட ஆண்களை மட்டுமே விசாரிக்கப்படுவார்கள்.  அந்நாட்டு சட்டத்தின் படி இந்த முறை பின்பற்றப்படுகிறது. இதுபோன்ற அவதூறுகளை கலைக்கவே அரசும் நினைக்கிறது. இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான நசீர் ஹொசைன் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.

The next complained to Nasir Hossain that he had married his wife

நசீர் ஹொசைன் பங்களாதேஷ் அணிக்காக 19 டெஸ்ட், 65 ஒரு நாள் மற்றும் 31 இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 30 வயதான இவர் கடந்த  2021 காதலர் தினத்தன்று விமானப் பணிப்பெண் தமிமா சுல்தானாவை மணந்தார். இதற்கிடையில் அவரது முதல் கணவர் ரகிப் ஹசன் நசீர் ஹொசைனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், கள்ளத் தொடர்பு, சட்டவிரோத திருமணக் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். 

மேலும், தான் இன்னும் தமீமாவுடன் திருமண உறவில் இருப்பதாகக் கூறுகிறார் மாஜி கணவர் ரகிப். எனவே குற்றம் நிரூபிக்கப்பட்டால்ல நசீரூக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிகிறது.  அதேபோன்று நசீர் மனைவி தமிமா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரகிப்பின் வழக்கறிஞர் இஷ்ரத் ஹசன் கூறுகையில், "ரகீப் என்பவருடன் விவாகரத்து ஆகிவிட்டதாகக் கூறும் தமிமா, அதற்கான ஆவணங்கள் மற்றும் தபால் ரசீதுகளை போலியாக தயாரித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும், கிரிக்கெட் வீரர் மற்றும் தமிமா சார்பில் ஆஜரான ஃபரித் உதின் கான், "மார்ச் 10 முதல் சாட்சிகளின் சாட்சியங்களை நீதிமன்றம் பதிவு செய்யும் என்றார். நசீர் மற்றும் தமிமா இருவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

NASIR HOSSAIN, TAMIMA SULTANA, BANGLADESH, CRICKET PLAYER, AFFAIR CASE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்