"ட்விட்டரில் 'டிரெண்ட்' ஆகும் #Thankyouvirat... "அய்யய்யோ அதுக்குள்ளே ஆரம்பிச்சிடீங்களா??..." பரபரப்பை கிளப்பிய 'நெட்டிசன்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய நிலையில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பெங்களூர் அணி வெளியேறிய நிலையில், ட்விட்டரில் #Thankyouvirat என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெறாமல் போனது கடும் சர்ச்சையை கிளப்பியது. காயம் காரணமாக ரோஹித் அணியில் இடம்பெறவில்லை என பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில், ரோஹித் ஷர்மா ஐபிஎல் போட்டியில் களமிறங்கி தான் தகுதியுடன் இருப்பதாக சொல்லாமல் சொல்லிச் சென்றார்.

ஆனால், அவர் சிறிய இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும் 4,0 ஆகிய ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால், அவர் உண்மையாக உடற்தகுதியுடன் இல்லை, அணியில் இருந்து ஓய்வு பெறப் போகிறார் என்றெல்லாம் கூறி #ThankyouRohit என்ற ஹேஸ்டேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் டிரெண்ட் செய்தனர்.

அதே போல தற்போதும் கோலிக்கு ஒரு நிகழ்வு நடந்துள்ளது. முன்னதாக, இன்றைய போட்டியில் விராட் கோலி  திடீரென தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 6 ரன்களுடன் அவுட் ஆனது கடும் விமர்சனத்துக்குள் ஆனது.

மேலும், இந்த முறை கடைசி 4 லீக் போட்டிகளில் பெங்களூர் தோல்வி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ஆனாலும், அந்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தாமல் ஒரு அதிக இலக்கை கூட நிர்ணயிக்க முடியாமல் பெங்களூர் அணி அதிகம் திணறி வருவதைக் குறி வைத்து கோலி கேப்டன்சியை விட்டு விலக வேண்டும் என்ற நிலையில் இந்த ஹேஸ்டேக்குகளை அதிகம் தற்போது  டிரெண்ட் செய்து வருகின்றனர். 













 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்