‘கனவு நனவாச்சு’... ‘சிட்னி மைதானத்தில்’... ‘நடராஜனுக்கு வாழ்த்தி சொல்லி’... ‘மாஸ்’ காட்டும் ‘தல’ அஜித் ரசிகர்கள்... !!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில், தல அஜித் ரசிகர்கள், இந்திய அணி மற்றும் நடராஜனுக்கு சிறப்பு வாழ்த்து சொல்லும் போஸ்டர் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 டி20 போட்டியில், இரண்டு போட்டியில் வென்று இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. எனினும் இன்று நடக்கும் 3-வது டி20 போட்டியில் வென்று ஆஸ்திரேலியாவை வாஷ் அவுட் செய்யும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த நிலையில் இந்தப் போட்டியை நேரில் பார்க்க பார்வையாளர்களாக சிட்னி மைதானத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள், அஜித் மற்றும் நடராஜன் இணைந்திருக்கும் பதாகையை கையில் வைத்து, மைதானத்தை தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நேரத்துல அலப்பறை ஆரம்பம், தல மாஸை பார்ப்பீங்க என்று  முன்கூட்டியே ட்விட்டரில் தல ரசிகர்கள் பதிவிட்டிருந்தனர்.

தர்ஷா என்ற ட்விட்டரில் பதிவிட்டுள்ள தல ரசிகர் ஒருவர், எனது வாழ்க்கையின் கனவு, கடைசியில் நிறைவேறியது என்று குறிப்பிட்டு இந்த போஸ்டரை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், ட்விட்டரில் #ThalaFansWishesNATARAJAN என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சேலத்தைச் சேர்ந்த நடராஜன்  கடைசியாக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டி மூலம் தனது முதல் சர்வதேச போட்டியை தொடங்கினார். அப்போது அவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 டி20 போட்டியிலும் நடராஜன் இறங்கினார். அதில், முதல் போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

2-வது போட்டியில் நடராஜன் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் நடராஜன் களமிறங்கிய 3-வது சர்வதேச போட்டியிலும் 4 ஓவருக்கு 33 ரன்கள் கொடுத்து கடைசி ஓவரில் விக்கெட் எடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்