கால்பந்தைப் போல டெஸ்ட் போட்டியில் அதிரடி மாற்றம்..! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகளை சாம்பியன்ஷிப் தொடராக மாற்றி ஐசிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடைபெற்ற தொடர்கள் போல் அல்லாமல் கால்பந்து போட்டிகளைப் போல் சாம்பியன்ஷிப் என்னும் புதிய முறையை ஐசிசி கொண்டு வந்துள்ளது. இதில் அனைத்து டெஸ்ட் அந்தஸ்து கொண்ட நாடுகளுடனும் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து ஐசிசி இந்த அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.
இதில் இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 9 அணிகள் இடபெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் சொந்த மைதானம் மற்றும் வெளி மைதானம் என இரு தொடர்களில் விளையாட வேண்டும்.
இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தம் 27 டெஸ்ட் தொடர்கள் கொண்ட இந்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 -ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகள் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடரில் இருந்து சாம்பியன்ஷிப் தொடர் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இவங்க ரெண்டுபேரோட சண்டைக்கு இதுதான் காரணமா..? கசிந்த தகவல்..!
- 'அல்மோஸ்ட் கன்ஃபார்ம்தான்..'.. 'முக்கியமான துப்பு கொடுத்த முன்னாள் வீரர்'!
- ‘அவரால இரண்டு உலகக் கோப்பை போச்சு’... இப்டி மாத்துனா தான் சரியா வரும்’... 'முன்னாள் இந்திய வீரர் காட்டம்'!
- செய்தியாளர்களை சந்திக்க மறுக்கும் வீரர்?... இதுதான் காரணமா?
- 'டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு'... '27 வயதில் இளம் வீரரின் முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘என்னோட கடைசி போட்டியை விளையாட போறேன்’.. ‘எனக்காக வந்து பாருங்க’.. தெரிவித்த பிரபல வீரர்..!
- ‘எல்லாரையும் திருப்திபடுத்தறது உங்க வேல இல்ல..’ இந்திய அணி குறித்து பிரபல வீரர் காட்டம்..
- ‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!
- மறுபடியும் ‘கிங்’ என நிரூபித்த விராட் கோலி..! வெளியான டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்..!
- வைரலாகும் பிசிசிஐ வெளியிட்டுள்ள.. ‘இந்திய அணியின் ஃபன் மொமெண்ட்ஸ் வீடியோ..’