ஆஸ்திரேலியா உடனான வழக்கில் தோல்வி- சொந்த நாடு திரும்பிய ஜோகோவிச்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடென்னிஸ் நட்சத்திரமான நோவக் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற்றப்பட்டதால் தனது சொந்த நாடான செர்பியாவுக்கே திரும்பினார்.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரில் பங்கேற்க உலகின் முன்னணி டென்னிஸ் வீரர் ஆன நோவாக் ஜோகோவிச் ஆஸ்திரேலியா வந்து இறங்கினார். செர்பியாவைச் சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் இதுவரையில் 9 முறைகள் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரைக் கைப்பற்றி உள்ளார்.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாத காரணத்தால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சுக்கு விசா வழங்கவும் விளையாடவும் அந்த அரசு மறுப்புத் தெரிவித்துவிட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என ஆஸ்திரேலியா நாட்டுக்குள் இவரை அனுமதிக்க அந்நாட்டு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இருந்து ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியா டென்னிஸ் சம்மேளனம் விலக்கு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது ஜோகோவிச்சுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியா அரசு, ஜோகோவிச்சின் பாஸ்போர்ட்டை திருப்பி வழங்கி அவரை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், ஆஸ்திரேலியா விசா வழங்க மறுத்துவிட்டது.
இதனால், ஜோகோவிச் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் காரணமாக இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து துபாய் சென்றால் ஜோகோவிச். பின்னர் அங்கு இருந்து தனது தாய் நாடான செர்பியாவுக்கே சென்றுவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆஸ்திரேலியா அவரை உடனே விடுவிக்கணும்'- விசா விவகாரத்தில் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக தீர்ப்பு
- தடை விதித்த ஆஸ்திரேலியா... கொதித்த செர்பியா மக்கள்!- டென்னிஸ் ஜோகோவிச்சுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம்!
- உலகப் புகழ் டென்னிஸ் ஜாம்பவானுக்கு 'நோ' சொல்லிய ஆஸ்திரேலியா... கொந்தளிக்கும் ஜோகோவிச் ரசிகர்கள்
- இஸ்ரேல் பெண்ணை விவாகரத்து செய்த ஆஸ்திரேலியர்... 8 ஆயிரம் ஆண்டுகள் தண்டனை கொடுத்த சட்டம்..!
- கூகுள் ஆண்டவரே... நன்றி! ஆஸ்திரேலியா டூ இந்தியா- 24 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சகோதரர்கள்
- இவங்களுக்கெல்லாம் ‘No’ இன்டர்வியூ.. ஒமைக்ரான் பரவலால் ‘H-1B’ விசா வழக்குவதில் தளர்வு.. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு..!
- 'பல பேருக்கு வாழ்நாள் கனவு...' 6 வயதில் 'சொந்தமா' வீடு வாங்கிய சிறுமி...! - கொண்டாடும் உறவினர்கள்...!
- 'ஏன் எங்களையே டார்கெட் பண்றீங்க'... 'விசாவுக்கு வந்த அதிரடி தடை'... 'எப்படி திரும்ப வேலைக்கு போவது'?... குழப்பத்தில் இந்தியர்கள்!
- 'உண்மையிலே நம்ம தல எவ்வளவு கெத்து'... 'எப்படியும் ஜெயிப்போம்ன்னு நினைச்ச ஜோகோவிச்க்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'விரக்தியில் செய்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!
- ‘வேகவேகமாக வெளியேறும் மக்கள்’.. ஆப்கானில் இருந்து சீக்கிரம் இந்தியா வர ‘விசா’ முறையில் புதிய மாற்றம்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!