Rachel Stuhlmann : மாடல் அழகிகளை ஓரங்கட்டும் டென்னிஸ் ப்ளேயர்.. இன்ஸ்டாவில் மட்டும் இத்தனை ஃபாலோயர்களா? யாரு இவங்க.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடென்னிஸ் விளையாட்டில் எப்போதுமே முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பார்கள். பொதுவாக டென்னிஸ் வீரர்கள் விளையாட்டில் பிரபலமாக இருப்பார்கள். விளம்பரங்களிலும் நடிப்பார்கள். ஆனால் அசரவைக்கும் மாடலாக வலம் வருவதும், மற்ற துறையினருடன் போட்டி போடும் அளவுக்கு அதிக ஃபாலோயர்களை சம்பாதிப்பதும் சற்று காண்பதற்கு அரியதுதான்.
இன்றைய சமூக ஊடகங்கள் சாதாரண மனிதர்களுக்கும் தங்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துக்கொள்ளும் வாய்ப்பை அள்ளி வழங்குகிறது. அதேபோல் பிடித்திருந்தால் யாரையும் பின் தொடர முடியும் என்கிற சமவாய்ப்பையும் வழங்கி அதை சாத்தியப்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமது ரசிகர்கள் வட்டத்தை பிரபல டென்னிஸ் வீராங்கனை ரேச்சல் ஸ்டல்மேன் விரிவுபடுத்தியுள்ளார்.
ஆம், பிரபல வீரர்கள் ரோஜர் பெடரர், செரீனா வில்லியம்ஸ் மற்றும் எம்மா ராடுகானு ஆகியோருக்கு இணையான வரிசையில் டென்னிஸ் விளையாட்டில் முன்னணியில் இருக்கும் ரேச்சல் ஸ்டல்மேனைத்தான், சமூக ஊடக தளங்களிலும் அதிக ரசிகர்கள், பின்தொடர தொடங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மிசோரி பகுதியில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரை சேர்ந்த ரேச்சல் ஸ்டல்மேன், டிக்டாக்கின் மூலம் பிரபலமானார். பின்னர் அவரது ஃபோட்டோக்களை அடுத்தடுத்து அப்லோடு செய்தார். மாடல் அழகியாக அந்த ஃபோட்டோக்களே அவருக்கு ரசிகர்களிடத்தில் இன்னொரு அடையாளத்தை பெற்றுத்தர, இன்ஸ்டாகிராமில் 2.32 லட்சம் ஃபாலோயர்களை தாண்டி ரேச்சல் ஸ்டல்மேன் பெற்றுள்ளார்.
இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமல்லாது இப்போது பரவலான ரசிகர்களிடமும் பிரபலம் ஆகியுள்ளது. இதுபற்றி பேசியுள்ள இவர், தடகள வீராங்கனையாகவே தான் இருக்க விரும்பியதாகவும், கல்லூரியில் டென்னிஸ் விளையாடும்போது, நேர நிர்வாகம், பணி நெறிமுறைகள் மற்றும் கடினம் வாய்ந்த சூழலில் இருந்து மீள்வது உள்ளிட்ட பல வாழ்க்கை கல்விகளை கற்றதாகவும் பின்னர் டென்னிசை தமது தொழிலாக மாற்றி கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டில் டாப் 3 நபராக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் முக்கியமில்லை என்றும், பெண்களின் திறமைகளை மிகவும் ஆச்சரியமாக பேசும் நிலையே இன்றும் உள்ளது என்றும் குறிப்பிட்ட ரேச்சல், கோல்ப் விளையாட்டில் தனது டிப்ஸ், எண்ணங்கள், ஆலோசனைகளை சமூக ஊடகம் வழியே வெளிப்படுத்தி வரும் பிரபல வீராங்கனை பெய்ஜ் ஸ்பைரனாக்கை தான் மதிப்பதாகவும், டென்னிசையும் ரசிகர்கள் மத்தியில் அதேபோல் பிரபலப்படுத்த தான் நினைப்பதாகவும் அதுவே தமது விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்