'இந்த சூப்பர்மேன் தனத்தயெல்லாம் மூட்டக்கட்டி வைக்கணும்'.. தனது உலகக்கோப்பை அணிக்கு அட்வைஸ் செய்யும் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மே 30-ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவிருக்கிறது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி. இந்நிலையில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டூ-பிளிசிஸ் பேசியுள்ள பேச்சுகள் வைரலாகியுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர்கொள்வதற்கான பல வழிமுறைகளை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அணிகளும் கையாண்டு வரும் நிலையில், தென்னாப்பிரிக்க கேப்டன் டூ-ப்ளிசிஸ் தனது வீரர்களுக்கு வழங்கியிருக்கும் அறிவுரை இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக 4 முறை உலகக் கோப்பையை செமி ஃபைனல் வரைச் சென்று நெருங்கிய வலுவான அணியான தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூ-ப்ளீசிஸ், இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாம் வழக்கமாகச் செய்யும் எதையும் செய்யக் கூடாது. புதிய அணுகுமுறை நமக்குத் தேவை. இதற்கு முன்பாக நம்மிடம் இருந்த அணுகுமுறையில் ஒரு போதாமை உள்ளது.

அதற்குக் காரணம் ஒரு அழுத்தத்துடன் விளையாடுவதுதான். அதனால், அதை விட்டுவிட்டு பயத்தில் இருந்து வெளிவந்து விளையாட வேண்டியுள்ளது. அதற்கு நாம் நம் சூப்பர் மேன் தனத்தையெல்லாம் விட்டுவிட்டு விளையாட்டில் முழு கவனம் செலுத்தி, அதே சமயம் ஜாலியாக விளையாட வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, WORLDCUPINENGLAND, DU PLESSIS, SOUTHAFRICA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்