"ஒழுங்கா 'ரூல்ஸ' ஃபாலோ பண்ணுங்க... இல்லன்னா 'ஊருக்கு' கெளம்பிடுங்க..." இந்திய அணிக்கு பகிரங்க 'எச்சரிக்கை'... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து இந்திய அணி கிரிக்கெட் போட்டிகள் விளையாடி வரும் நிலையில், இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மட்டும் மீதமுள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக, ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய வீரர்கள் கொரோனா விதிகளை உட்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரோஹித் ஷர்மா, பண்ட், சுப்மன் கில், ப்ரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றியுள்ளனர்.

இவர்கள் ஹோட்டல் ஒன்றிற்கு சென்று உணவு அருந்தியதாகவும், அங்கே ரசிகர் ஒருவரை கட்டிப் பிடித்ததாகவும் கூறி ஐந்து பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது மிகப்பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது. அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ளதால் இந்திய வீரர்களுக்கு இன்னும் அதிக கட்டுப்பாடுகள் போடப்படவுள்ளது. மேலும், அங்கு இந்திய வீரர்கள் அதிக நாட்கள் தனிமைப்படுத்தப்படவும் வாய்ப்பு இருக்கின்றது.

இதன் காரணமாக, அதிக கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்றும், பிரிஸ்பேன் நகரில் இருந்து போட்டியை மாற்ற வேண்டும் என்றும் இந்திய அணி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்திய அணியின் கோரிக்கையை ஏற்பதற்கு ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் தயாரில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பமில்லையென்றால் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா வர வேண்டாம் என இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அரசியல் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலிய எம்.பியான டிம் மாண்டர் என்பவர், 'இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வந்தால் இங்குள்ள விதிகளை மதிக்க வேண்டும். அதனை மதிக்க முடியாத பட்சத்தில் அவர்கள் இங்கு வரக் கூடாது. கட்டுப்பாடு விதிகள் என்பது அனைவருக்கும் பொதுவானது. அவர்களுக்கு இங்கே விளையாட விருப்பமில்லை என்றால் திரும்பிச் செல்லலாம்' என தெரிவித்துள்ளார்.

எம்.பியின் இந்த கருத்து, கிரிக்கெட் தொடர் முடிவடையும் தருவாயில் மிகப்பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்திய அணி கட்டுப்பாடுகளை தளர்த்த கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கடைசி போட்டி எங்கு நடைபெறும் என்பதில் மாற்றங்கள் உண்டாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்