‘கூல் ரோகித் கூல்… நோ டென்ஷன்…’- கேப்டன்ஷி குறித்து ரோகித் சர்மா என்ன சொல்றார்ன்னு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒரு நாள் போட்டிகளின் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஆக முதன் முறையாக பேட்டி கொடுத்துள்ளார் ரோகித் சர்மா. இந்திய அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் என இரு ஃபார்மெட்டுகளிலும் இனி ரோகித் சர்மாவே கேப்டன் ஆகத் தொடர்வார்.

‘கூல் ரோகித் கூல்… நோ டென்ஷன்…’- கேப்டன்ஷி குறித்து ரோகித் சர்மா என்ன சொல்றார்ன்னு பாருங்க..!
Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ‘கேப்டன்ஸி சர்ச்சையில்’ சிக்கித் தள்ளாடி வருகிறது. ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி, எந்த வித முன் அறிவிப்புமின்றி நீக்கப்பட்டது தான் சர்ச்சைகளை ஆரம்பித்து வைத்தன. அவருக்கு பதிலாக இனி டி20 மற்றும் ஒருநாள் ஃபார்மட்டுகளுக்கு ரோகித் சர்மா, கேப்டனாக செயல்பட உள்ளார்.

Team India ODI captain speaks on about his captaincy

புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள ரோகித் சர்மா பிசிசிஐ டிவி-க்காக கொடுத்த பேட்டியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ரோகித், “இந்திய கிரிக்கெட் அணி விளையாடப் போகிறோம் என்றாலே அதற்கு உண்டான அழுத்தம் நிச்சயம் அதிகமாக இருக்கும். அதிகப்படியான நபர்கள் அது குறித்துப் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். நேர்மறையாகவும் பேசுவார்கள் அல்லது எதிர்மறையாகவும் பேசுவார்கள். என்னைப் பொறுத்த வரையில் ஒரு கிரிக்கெட் வீரர் ஆக எனது வேளையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் என்னால் கவனம் செலுத்த முடியாது. ஏனென்றால் அது கட்டுப்படுத்த முடியாது விஷயம். நான் லட்சம் முறை சொல்லிவிட்டேன். இனியும் இதைத் தொடர்ந்து சொல்வேன். மற்றவர்கள் பேசுவதை ஒண்ணும் செய்ய முடியாது. இது எனது அணிக்காகவும் சொல்லிக்கொள்கிறேன். ஒரு பெரிய அணிக்காக பெரிய, உயர் ரக ஆட்டத்தில் விளையாடும் போது சுற்றிலும் எல்லாரும் பேசத்தான் செய்வார்கள்.

நாம் தான் நமக்கு முக்கியமானதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். என் அணியினர் நிச்சயமாக நன்றாக விளையாட வேண்டும். போட்டிகளில் வெற்ற பெற வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வெளிப்பேச்சுகள் எல்லாம் அர்த்தமற்றது. நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதே முக்கியம். இதுதான் நாம் சாதிக்க விரும்பும் லட்சியத்தை அடைய உதவும்” எனப் பேசியுள்ளார்.

அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குத் தயாராகி வருகிறது. டிசம்பர் 26-ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அதன் பின்னர் ஒரு நாள் போட்டித் தொடர்கள் பல வரிசையாகக் காத்திருக்கின்றன.

CRICKET, ROHIT SHARMA, ODI CAPTAINCY, NEW INDIA CAPTAIN, ரோகித் சர்மா, இந்திய அணி கேப்டன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்