திணறும் ‘இந்திய A’ அணி… அடித்து விளாசும் ‘தென் ஆப்பிரிக்கா A’… தொய்வுடன் தொடங்கிய டெஸ்ட் போட்டி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய A அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் அந்நாட்டு A அணி உடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இந்திய சீனியர்கள் கிரிக்கெட் அணியினர் விரைவில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதற்கு முன்னதாக தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவின் A அணியினர்கள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றனர்.

Advertising
>
Advertising

3 டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு போட்டியும் 4 நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. முதல் போட்டி நவம்பர் 23 முதல் 26-ம் தேதி வரையில், 2-ம் போட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 2 வரையில், 3-வது போட்டி டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அனைத்து போட்டிகளுமே தென் ஆப்பிரிக்காவில் உள்ள புளோயெம்ஃபொன்டின் நகரில் நடைபெறுகிறது.

இந்திய A பிரிவு அணிக்கு பிரியங் பஞ்சல் கேப்டன் ஆக பொறுப்பு வகிக்கிறார். நேற்று முதல் நாள் போட்டியில் இந்திய A அணி முதலில் பவுலிங் செய்வதாகத் தேர்ந்தெடுத்தது. தொடக்கத்தில் இருந்தே தென் ஆப்பிரிக்கா அணியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். முதலில் தென் ஆப்பிரிக்கா சார்பில் களம் இறங்கிய மலன் 258 பந்துகளுக்கு 157 ரன்களும், ஜொர்சி 186 ரன்களுக்கு 117 ரன்களும் அடித்து பின்னர் வெளியேறினர்.

தொடக்க ஆட்டக்காரர்களால் தென் ஆப்பிரிக்க அணி போட்டியில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய A அணி சார்பில் நவ்தீப் சைனி, அர்சன் நாக்வாஸ்வாலா மற்றும் உம்ரான் மாலிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தனர். சுழற்பந்து வீச்சாளர்களான ராகுல் சாஹர், கே கவுதம் மற்றும் பாபா அபராஜித் ஆகியோர் விக்கெட் எடுக்கத் தவறி உள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியில் அழைக்கப்படாமல் இருந்த ப்ரித்வி ஷா மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் தற்போது தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாட அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, INDIA A TEAM, INDVSSA, TEST SERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்