இனி ‘VIVO’ ஐபிஎல் கிடையாது.. டைட்டில் ஸ்பான்சரை தட்டித் தூக்கிய ‘மிகப்பெரிய’ நிறுவனம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் டைட்டில் ஸ்பான்சரை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் லக்னோ, அகமதாபாத் என்ற 2 புதிய அணிகள் இணைய உள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை டாடா குழுமம் (Tata Group) கைப்பற்றியுள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார். சீன நிறுவனமான விவோ (Vivo) வசமிருந்த டைட்டில் ஸ்பான்சர் டாடா குழுமத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவோ நிறுவனம் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை 2200 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இதனிடையே இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே எல்லையில் நடந்த மோதல் காரணமாக 2020-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் விவோவுக்கு பதிலாக dream11 டைட்டில் ஸ்பான்சராக இருந்தது.
இதனை அடுத்து கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் டைட்டில் ஸ்பான்சராக விவோ செயல்பட்டது. இந்த நிலையில் டைட்டில் ஸ்பான்சர் உரிமையை வேறு நிறுவனத்திற்கு விவோ வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி டாடா குழுமத்துக்கு டைட்டில் ஸ்பான்சர்ஷிப் கை மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இனி ‘டாடா ஐபிஎல்’ என விளம்பரம் வெளியாகும் என தெரிகிறது.
மற்ற செய்திகள்
அவ்ளோ கஷ்டத்த பார்த்துட்டேன்.. இப்போ என் வாழ்க்கையே தலைகீழா மாறிடுச்சு.. ரொனால்டோவின் காதலி உருக்கம்
தொடர்புடைய செய்திகள்
- BCCI போட்ட பிளான் B - இந்த IPL சீரிஸ் முழுவதும் அங்க மட்டும்தான் நடக்கும் போலயே?
- சரியா ‘வாய்ப்பு’ கிடைக்கல.. திடீரென ஓய்வை அறிவித்து ‘அமெரிக்கா’-க்கு விளையாட பறந்த SRH வீரர்..!
- ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மெகா ‘ஐபிஎல்’ ஏலம்.. எப்போ, எங்கே நடக்கப்போகுது தெரியுமா..?
- அவரை தக்க வைக்காம RCB பெரிய ‘தப்பு’ பண்ணிட்டாங்க.. நீங்க வேணா பாருங்க அவர்தான் அதிக விலைக்கு ‘ஏலம்’ போக போறாரு.. முன்னாள் வீரர் அதிரடி கருத்து..!
- Mentor ரோலுக்கு கௌதம் கம்பீர் ஏன்..? அவருடைய வேலை என்ன..? லக்னோ உரிமையாளர் அதிரடி கருத்து..!
- மறுபடியும் சிஎஸ்கே ஜெர்சியில் பார்க்க வாய்ப்பு இருக்கா..? ரசிகர்கள் எழுப்பிய கேள்வி.. உருக்கமாக ‘அஸ்வின்’ சொன்ன பதில்..!
- VIDEO: ‘ஆர்சிபி.. ஆர்சிபி’ கத்திய ரசிகர்கள்.. உடனே சைகையில் ‘சிராஜ்’ சொன்ன விஷயம்.. அடுத்த நொடியே மாறிய கோஷம்..!
- இது மட்டும் நடந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் கோலியாதான் இருப்பார்.. முன்னாள் கோச் சூசகமாக சொன்ன தகவல்..!
- ‘அவரை ஏலத்துல எடுக்க ரொம்ப கடமை பட்டிருக்கோம்’.. ‘சின்ன தல’-ய விட முக்கியமான வீரர்..? சிஎஸ்கே சிஇஓ ஓபன் டாக்..!
- RCB அணியின் புதிய கேப்டன்..? ‘கோலியும் இவரைத்தான் ஆதரிப்பார்’.. முன்னாள் கோச் கொடுத்த அசத்தல் அப்டேட்..!